உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிடம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-9-


இலட்சியச் “சொல்” திராவிடம்

திராவிடம்!

"திராவிடம்" என்ற சொல்லாராய்ச்சிபற்றி பலரும் தங்கள் தங்கள் கருத்தை வெளியிடுகிறார்கள். “திராவிடம்,” தமிழ்ச் சொல் அல்லவே, அதை எப்படி நீங்கள் வைத்துக்கொள்ளல் சரியாகும் என்று நம்மைக் கேட்கிறார்கள். "திராவிடம்" என்பது தமிழகத்தைக் கிரேக்கர் வழங்கிய சொல்லாகும். அது அவர்களால் இறக்குமதி செய்யப்பட்டதாகும் என்று அன்பர் ஆர். கே. சண்முகம் கூறுகிறார். வேறு சிலர் வடமொழியாளர் வழங்கிய சொல் "திராவிடம்" என்கிறார்கள். தோழர் அண்ணல்தங்கோ. அது "திராவி" என்ற இழிசொல்லிலிருந்து பிறந்தது என்கிறார். பலரும் பலவிதக் காரணங்களைக் கூறுகிறார்கள். ஆனால், "திராவிடம்" என்ற சொல்லை திராவிட முன்னேற்றக் கழகத்தார், வரலாற்று அடிப்படிடையை ஆதாரமாகக்கொண்டு வழங்குகிறார்களே யல்லாமல் சொல்லாராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டல்ல.


கண்டமாகக் கருதும்போது.... ?

ஒரு பழம்பெரும் நாகரீகத்திற்கு அந்த நாகரிகத்தை அடிப்படையாகக்கொண்ட மக்கள் வாழும் பகுதிக்கு, மொழிக்கு. உலக வரலாற்றறிஞர்களும். மொழி நூல் அறிஞர்களும் "திராவிடம்"" என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். உலக அறிஞர்களும், வரலாற்று ஏடுகளும் வழங்கும் பெயரையே நாமும் வழங்குகிறோம். அது ஒரு நாட்டிற்கு, மொழிக்கு மக்களுக்கு, நாகரிகத்திற்கு இடுகுறி சிறப்புப்பெயர் என்ற முறையில் வந்து விட்டது. அதன் ஓசையும் தமிழ் உச்சரிப்புக்கு மாறானதல்ல ஆகவேதான். அதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். நாம் தம்பிமார்களால் அழைக்கப்படும்போது. அண்ணன்மார்களாகிறோம். அண்ணன்மார்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திராவிடம்.pdf/10&oldid=1634991" இலிருந்து மீள்விக்கப்பட்டது