-11-
என்கிறார் சண்முகம். 'பாக்ஸ்தான்' எந்த வேதத்திலே. எந்த ஸ்மிருதியிலே. எந்தக் குரானிலே. எந்த வரலாற்று ஏட்டிலே இருந்தது? பாக்கிஸ்தானிகளின் எந்த அகராதியிலே இடம் பெற்றிருந்தது? ஒன்றுமில்லையே! பத்து ஆண்டுகளுக்குள்ளாவே உண்டாக்கப்பட்டு. இன்று அவனி முழுவதும் பரவி நிற்கும் சொல்லாக இருக்கிறதே. 'பாக்கிஸ்தான்' என்ற சொல். ஆனால் 'திராவிடம்' என்ற சொல் அப்படிக்கூட இல்லையே: பழந்தமிழ் நூல்களிலும். இருக்கின்றனவே!
'பாக்கிஸ்தான' என்ற புதுப்பெரை ஒரு நிலப்பகுதிக்குப் புதிய பொருள் கொள்வோம்! திரு-இடம். திருவிடம் -- திரவிடம்-திராவிடம் என்று ஏன் கொள்ளக் கூடாது? அழகிய இடம் என்னும் பொருள் தரும் சொல்லை. நாம் பயன்படுத்துவதாக ஏன் கொள்ளக் கூடாது? வரலாற்றால் அழைக்கப்படும் சொல்லும். 'திராவிடம்' நம்மால் அழகிய இடம் என்று பொருள்பட அழைக்கப்படும் சொல்லும்'திராவிடம் இரண்டு விதத்திலும் இணங்கியிருக்கும் 'திராவிடம்' என்ற சொல்லை ஏன் பயன்படுததக்கூடாது? திராவிடத்தில் வாழ்பவர்கள் திராவிடர்கள். இதில் தவறு என்ன? வரலாற்றையும். மொழியையும் ஆராய்ந்து, அதனோடு அரசியல் பொருளாதார, சமுதாயப் பிரச்சினைகளையும் ஒட்டிவைத்துப் பார்க்க தோழர் அண்ணல்தங்கோ சிறிதுபழக்கம் பெறுவாரானால் 'திராவிடம்' என்ற சொல்லின் இன்றியமையாமையை அவர் உணர்வார் என்பதில் ஐயமில்லை.
தமிழ்ச் சொல்லே
பெயரைவிட நமக்குப் பொருளே முக்கியம். ஆகவே தான், பொருளைப்பற்றிச் சற்று மிகவாகக் கவலைப்படுகிறோம்: அண்ணல் தங்கோவைப் போன்றவர்கள் நாட்டில் பெருவாரியாகத் தோன்றி, பெயர் ஒன்றிலேதான் எங்களுக்கு வேறுபாடு, மற்றெவற்றி லும் ஒப்புதலு-