உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிடம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-7-

டாகிவிட்டது. அச்சமும் அவ நம்பிக்கையும் பெற்றெடுக்கும் குழந்தையே பயங்கரப் புரட்சியைத் தடுக்கவே, இப்போது பிரியவேண்டும் என்கிறோம்.

15. இந்தியா பிரியாது இருந்ததால் இதுவரை, ராணுவ, பொருளாதார, அறிவு, பலம், வளர்ந்ததாகவோ இந்திய இனம் என்ற புதிய சமுதாயம் அமைந்ததாகவோகூற எந்த ஆதாரமும் இல்லை. ஒரு இனத்தின் குரல் வளையை மற்றொரு இனம் அழுத்தி நெரித்துக் கொல்லாது போனதற்குக்காரணம் எல்லா இனத்தையும் பிரிட்டிஸ் துப்பாக்கி ஏககாலத்தில் அடக்கி வைத்திருந்ததால்தான் எனவே இத்தகைய இன்னல்கள் உண்டாகாதிருக்க, இனவாரியாக இடம் பிரித்து விடுவதே ஆபத்தைத் தடுக்கும் வழி.

எனவே இனவாரியாக இந்தியா பிரிந்தால், இன இயல்புகள் தனித்துத் தனிச்சிறப்புடன் விளங்கவும், ஆரிய ஆதிக்கம் அடங்கவும் பொருளாதாரச் சுரண்டல் போகவும், அறிவை அடக்கும் அவதி நீங்கவும், எதிர்காலத்தில் பூசல் எழாதிருக்கவும், சாந்தம், சமாதானம் நிலவவும் மார்க்கமுண்டு. எனவேதான் இந்தியா இனவாரியாக பிரிக்கவேண்டும் என்று, இந்தியாவை இனப்போர்களமாகக் காணக்கூடாது என்ற நல்ல நோக்கம் கொண்டவர்கள் கூறுகின்றனர் இதை மறுப்பவர்கள், சரிதத்தை மறந்தவர்களாக இருக்க வேண்டும், இல்லையேல் சரிதத்தை மக்கள் தெரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணங்கொண்டவர்களாக இருக்கவேண்டும். இல்லையேல் சரிதத்தை மக்கள் தெரிந்துகொள்ளவில்லை என்ற எண்ணங்கொண்டவர்களாக இருக்கவேண்டும். ஒரே இன இயல்பு அதாவது ஆரிய ஆதிக்கம், மற்றவைகளை, மற்றவைகள் மிதித்துத் துவைத்து அழிக்கவேண்டுமென்ற கெட்ட எண்ணங்கொண்டவர்களும், வலுத்தவனுக்கு வாழ்க்கைப்படும் வனிதைபோலா, இந்தியாவைச் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திராவிடம்.pdf/8&oldid=1634989" இலிருந்து மீள்விக்கப்பட்டது