11
________________
11 தென்னாட்டுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அந்தச் சிறப்பு அரசியல் நிலையால் உருவானது அல்ல; தெற்கே நிலவும் கலாச்சாரத்தின் சிறப்பு நிலையினால் உருவானது. ஆனாலும், பிறரால் மதிக்கப்படாமல் மங்கிப்போகிற பிறருக்குத் தாழ்ந்துள்ள ஒரு நிலை கடந்த 300, 400 ஆண்டுகளாக நாளடைவில் வளர்ந்து வந்துள்ளது. ஆங்கிலேயருடைய தலைநகரம் தில்லியாக அமைந்தது. முகம்மதிய சுல்தான்களின் பேரரசுகளின் தலைநகரமும் தில்லியாக அமைந்தது. எனவே, 400, 500 ஆண்டுகளாகவே, தில்லிக்கு ஏற்பட்ட அந்தச் சிறப்பு, தலைநகரத்தையொட்டி, அங்கே வாழுகிற மக்களையும் சார்ந்தது. அவர்களுக்கே இந்த நாட்டு ஆட்சி உரியதாக எண்ணுமளவுக்கு ஓர் எண்ணம் கால்கொண்டது. இந்தியாவின் பிற பகுதி மக்கள் அவர்கள் ஆட்சியில் டம் பெற்றவர்கள் என்னும் மனப்பான்மையும் வளர்ந்தது. மேல்நாட்டாருடைய ஆய்வுகள் எல்லாம் முதன்முதல் சமற்கிருத மொழி ஏடுகளைப் பற்றியதாக அமைந்துவிட்டதால் அவ்வடமொழி அடிப்படையிலேயே இந்திய நாகரிகம் மதிக்கப்பட்டது. உலகமே வியக்கத்தக்க கருத்துக்கள் எல்லாம் வேதங்களில் இருக்கின்றன, உபநிடதங்களிலும், சாத்திரங்களிலும், இதிகாசங்களிலும் இருக்கின்றன என்று கூறப்பட்டதை நம்புகிற வெளிநாட்டார் அதிகம் இருந்தார்கள் என்பதனாலும், தெற்கே வழங்கும் மொழிகளையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அறிந்து ஆய்வு செய்வதற்கான ஆர்வம் மேல்நாட்டாருக்குங்கூட நீண்ட நாள் வரை ஏற்படாததாலும், அவர்களால் ஆரியமே போற்றி மதிக்கப்பட்டது. அந்தச் சூழ்நிலையின் தாக்கத்தால் தென்னகத்தினுடைய மொழி, கலாச்சாரம், பண்பாடு, இனம் ஆகியவற்றின் தனிச் சிறப்பு விளங்கித் தோன்றாமல் போய்விட்டது. அந்த நிலையிலிருந்து கொஞ்சம் விழிப்புற்ற