உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


________________

24 - - ஆரியரின் வேத நாகரிகம் கிறித்தவ நூற்றாண்டுத் தொடக்க கால கிரேக்கர் அல்லது கெல்டிக் இனத்தாரின் நாகரிகமோ அல்லது கிறித்துவுக்கு முற்பட்ட கால டியூட்டன்களும் சால்வுகளும் கொண்டிருந்த நாகரிகமோதான் இதிகாசங்களிலும், இந்து நாகரிகத்திலும் திராவிடர்களின் செல்வாக்கின் விளைவாக இடம் பெற்றிருக்கிறது என்கிறார் சர்வபள்ளி இராதாகிருட்டிணன். இது குறித்து ஆய்வாளர்கள் தரும் விளக்கம் சற்று வேறுபடினும், திராவிடத்தின் செல்வாக்கு ஆரியத்தில் பதிந்துள்ளது என்பதை மறுப்பார் இல்லை. அக்காலத்தில் திராவிடர்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வந்தவர்கள் ஆக இருக்கலாம் என்னும் தவறான கருத்து நிலவியதாலும், தென்னகத்திலிருந்தோ, கடலில் மறைந்த குமரிக்கண்டத்திலிருந்தோ மேற்கே சென்றவர்கள்தான், சுமேரிய, கிரேக்க, எகிப்திய நாகரிகங்கள் உருவாகக் காரணமானவர் என்னும் கருத்து வலுப்பெறாததாலும், பின்னர் அப்பகுதிகளிலும், இந்தியாவில் நுழைந்த ஆரிய இனத்தின் மற்றொரு பிரிவினர்தான் பலகிளைகளாகப் பரவினர் என்னும் வரலாற்று உண்மை தெளியப் படாததாலும் அவர் இப்படிக் கருத நேரிட்டிருக்க வேண்டும். ஆனால், தென்னாட்டையே மூல வாழ்விடமாகக் கொண்டிருந்த திராவிடர்களிடமிருந்துதான் ஆரியர் நாகரிகத் தத்துவச் சிந்தனை பெற்றனர் என்பதும், அவையே ஆரியர் உபநிடதங்களில் இடம்பெற்றன என்பதும் இன்று அறிஞர் பலரால் தெளிவாக்கப்பட்டுள்ளன. தொடக்கக் காலத்தில் ஆரியர்கள், வானத்தையோ அல்லது யாதேனும் ஓர் ஒளிரும் கோளையோ தம் தந்தையாக மதித்ததால் அவை தாம் செய்யும் யாகத்தை மேலிருந்து காணும் என்னும் கருத்தினராய், யாகத்தில்