26
________________
26 - ஒவ்வொன்றை உயர்வாகக் கருதி சூரியன், அக்கினி, இந்திரன், போன்ற பல தெய்வங்களைப் போற்றி வந்த ஆரியர் பிரும்மா, விட்டுணு, ருத்திரன் என்னும் மும்மூர்த்திகளைப் போற்றி யாகத்திற்கு அதிபதியாக அவற்றுள் ஒன்றை அழைக்கும் வழக்கத்தினராய் மாறிய காலத்திலும், 'கடவுள்' ஒன்றே என்னும் தத்துவக் கொள்கையை விளங்கிக் கொண்டவர் ஆகவில்லை என்பதற்குச் சான்றுகள் பல. அக்காலத்திற்குப் பின்னர் ஆரிய நாகரிகத்தில் பிரம்மம் - கடவுள் ஒன்றெனும் கொள்கையும் இடம்பெற்றது. அதிலே சில விளக்கங்களில் வேறுபாடு இருக்கலாம். ஒரு வேளை இங்கிருந்தும் மக்களிடம் நிலவிய சிலவகைக் கடவுள் நம்பிக்கை அங்கே போயிருக்கலாம்; அங்கிருந்தும் சில இங்கு வந்திருக்கலாம் என்பது வேறு. கடவுளைக் குறித்துப் பகுத்தறிவு அடிப்படையில் சிந்திக்க அக்காலம் இடந்தராது. வரலாற்று ஆசிரியர் கே.எம். பணிக்கர் (A survey of Indian History) இவ்வாறு தெரிவித்துள்ளார்: The doctrine of the Aryan origin of the Indian civilization which finds no support in Indian literature, which does not consider the Dasus as uncivilised, is the result of the theories of 'Indo-Germanic' scholars who held that everything valulable in the world originated from the Aryans. Not only is Indian civilization pre-vedic but the essential features of Hindu religion as we know is to day, were present in Mohenjo Daro. "There is enough in fragments we have recovered" says Sir John Marshall about the religious articles found in the sites, "to demonstrate that.... this religion of Indus people was the lineal progenitor of Hinduism". In fact Siva and Kali, the worship of Lingam and other features of popular Hinduism were well established in India long before the Aryans came".