40
________________
40 அதில் சுந்தரம் அய்யர் எழுதியிருந்த கருத்தும் சுட்டிக் காட்டப்பட்டு இருந்தது. அதைக் கண்ட பாரதியார் சொல்கிறார், "நான் பேராசிரியரிடமிருந்து மாறுப்பட்டு நிற்கிறேன். அவருடைய கருத்துடன் அடிப்படையாகவும், தீவிரமாகவும் முழுமையாகவும் நான் மாறுபடுகிறேன். பிராமணர்களாகிய நாமும் மனிதர்கள்தான் என்று நான் நினைக்கிறேன். மனிதன் என்றுதான் உன்னைப் பற்றி நீ சொல்லிக் கொள்ளலாமே தவிர, உயர்வாகச் சொல்லிக் கொள்ளாதே! ஒவ்வொருவருடைய குடுமியும், சாப்பாடும் அவரவர் சொந்த விஷயங்கள். பிராமணன்தான் தலைமை வகிக்க வேண்டும் என்று சாதி அடிப்படையிலே கேட்பது தவறு! இன்றைய பிராமணர் தமக்குக் கொஞ்சம்கூடத் தகுதியில்லாத ஆன்மீகத் தலைமையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் செய்கிற சாகசங்களையும், உபாயங்களையும் விவரிப்பதென்றால் எனக்கும், மற்றவர்களுக்கும் அது வருத்தத்தைத்தான் கொடுக்கும். ஆன்மீகத் தலைமை, கடவுளைக் காட்டுகிற வேலை. அது நல்ல பெரிய உத்தியோகம். அந்த உத்தியோகத்தை விட்டு மற்ற உத்தியோகத்திற்கு வந்து விடக்கூடாது” நான் சூடான வார்த்தையினால்தான் சொல்ல முடியும். "புதிய யுகத்தை நோக்கி எழுச்சி பெற்று வருகிறது இந்தியா! உண்மையிலேயே இப்போது நாம் விழிப்புற்று வருவதால், தங்களது ஏமாற்று வேலையையும் அதோடு சேர்ந்து அந்த ஏமாற்று வேலைகள் மீது அமைக்கப்பட்ட அற்பத்தனமான தேச (மக்கள்) விரோதப் பழக்க வழக்கங்களையும், பிராமண மக்கள் தாங்களாகவே முன்வந்து கைவிட்டுவிட்டு, இந்திய நாட்டில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை ஏற்றிட வழிகாட்டுவது அவர்களுக்கே நல்லது" சாதிப் பெருமையைக் கைவிடுங்கள்;. வழிகாட்டும் வேலையை நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். எல்லோருக்கும் சுதந்திரம் கிடைப்பதற்கும்