48
________________
48 ஜமீன்களை நிருவகித்து ஆட்சி நடத்துவதில் பிராமணரல்லாதார் பலர் மிகச் சிறப்புடன் விளங்கி வருகின்றனர். பிராமணர்களுக்கு மட்டுந்தான் அறிவு இருக்கிறது என்பதை ஏற்கமுடியவில்லை. சிறந்த நிர்வாகியாகப் (Best Administrator) பிராமணர் அல்லாதார் பலபேர் இருக்கிறார்கள். அவர்களுள் சிலருக்கு இணையாகப் பிராமண வகுப்பில் எவரையும் கூறமுடியாத அளவுக்கு அவர்கள் சிறந்து விளங்கி வருகின்றனர். தமது உரிமை உணர்ந்து, சுயமரியாதையுடன் அவர்கள் ஒன்று சேர்ந்து முயற்சி செய்திருப்பார்களேயானால், அரசாங்க அலுவல்களில் அவர்களின் பிறப்புரிமையின்படி முதல் இடத்தைப் பெற்றிருப்பார்கள். இந்தப் பிறப்புரிமை என்பது அறிவால் பெறும் பிறப்புரிமை. தங்களுக்கென்று ஒரு சங்கம் இல்லாததாலும், தங்களுடைய கருத்துக்களை வெளியிடப் பத்திரிக்கை இல்லாததாலும், பிராமணர் அல்லாதார் தங்கள் உரிமையைத் தெரிந்துகொள்ள முடியாமல் போயிற்று" இவ்வாறு தியாகராயர் விளக்கிக் கூறியுள்ளார். 1918இல் நீதிக்கட்சியின் மாநாடு நடந்தபோது எம்.டி. சுப்பிரமணிய முதலியார் பேசினார். அவர் நல்ல அழுத்தமான தெய்வப் பற்றுள்ளவர். பி.டி.ஆர் அவர்களின் சிறிய தந்தை என்று கருதுகிறேன். அவர் நீதிக்கட்சியிலே இணைந்து பணியாற்றியவர், அவர் ஆற்றிய வரவேற்புரை 1968இல் வெளிவந்த நீதிக்கட்சி பொன்விழா மலரில் இடம்பெற்றுள்ளது இது. "இந்தியா நீங்கலான மற்றப் பொறுப்பான ஆளுகையைப் பெற்றுள்ள தேசங்களில், முதலாளி, தொழிலாளி என்ற இரண்டு வேறுபட்ட நிலை தவிர, பிறப்பினால் ஆகிய எவ்வித வித்தியாசமும் இல்லாததால் அங்குள்ளவர்கள் தங்கள் தங்கள் முயற்சியால், எவ்வித உரிமையையும், முன்னேற்றத்தையும் அடையச் சுதந்திரம் உடையவராய் இருக்கிறார்கள்" They have the ability to fight