51
________________
51 ஆரியர் வேறு இனம்; திராவிடர் வேறு இனம்; ஆகையால், பிராமணர்களுக்கும், பிராமணர் அல்லாதார்களுக்கும் ஏற்றத்தாழ்வு கூற இடம் கிடையாது என்பது ஒரு கொள்கை. ஆரிய பிராமணன் வேறு; தமிழர்களிடையே இருந்த பார்ப்பனர் வேறு என்னும் ஒரு கொள்கையும் மறைமலையடிகள், காசு பிள்ளை, சோமசுந்தர பாரதியார் போன்றவர்களால் கூறப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டிலே அந்த நாட்களில் வைதிக உணர்வுக்கு இடம் இருக்க நியாயம் இல்லை என்று சொன்னாலுங்கூடக் கடவுள் வழிபாட்டு முறையிலே பார்ப்பனர் என்னும் பெயருடைய தமிழர்களே தேவாரம், திருவாசகம் ஓதுபவர்களாகவும், ஓலைச்சுவடி படிப்பவர்களாகவும் இருந்துள்ளனர் என்னும் ஒரு கருத்தும் உள்ளது. தென்னிந்தியாவில் ஆகமத்தின்படி ஏற்பட்டிருந்த சைவ, வைணவ ஆலயங்கள் யாவும் திராவிடர்களுக்கு உரிமையானவை; திராவிடர்களால் வழிபாடு செய்யப்பட்டவை என்றும் சொல்லப்படுகிறது, இது மறைமலையடிகளார் கூறியது. இதற்குத் தக்க சான்று கோயில்களில் உள்ள விக்கிரகங்களே ஆகும். இவ்விக்கிரகங்களின் காதுகள், திராவிட இன நாயன்மார்களின் காது வளர்ப்பு முறையைப் பின் பற்றி அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். தென்னாட்டிலே இருக்கிற விக்கிரகங்களிலேயெல்லாம் இந்த நீண்ட தொள்ளைக் காது அமைப்பு முறை உள்ளது. தொங்கிக் கொண்டிருக்கும் காதுதான் இங்குள்ள விக்கிரகங்களுக்கும் அமைந்திருப்பதால் இது ஆரியக் கடவுள் திருவுருவம் ஆகாது என்பது அவர்தம் கருத்து. "ஆனால் வைதிகப் பிராமணர்களின் வருணக் கொள்கையின்படி, பிராமணர், சூத்திரர் என்ற இரண்டு வகுப்புக்களே உள்ளன என்றும், சூத்திரன் என்ற பதத்திற்குப்