உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


________________

56 சூத்திரர்கள் படிக்கக்கூடாது என்று ஆணை பிறந்தது. அன்றைய நிலைமைதான் தலைமுறை பலவாகத் தொடர்ந்து நமது மனப்பான்மையில் நாம் தாழ்வுற ஏதுவாயிற்று. யாராவது இன்றைக்குச் சூத்திரன் எனப்பட்டவனைப் பார்த்து, உனக்கு ஏனடா கல்வி என்று கேட்டால், கேட்டவனை அறைவான். ஆனால், அன்றோ தமிழர்கள் அடிமை மனநிலைக்கு ஆட்பட்டிருந்தனர். புராணகாலத்தில் ஏகலைவன் என்னும் வேடன் துரோணாச்சாரியாரிடம் வில்வித்தை கற்றுக்கொள்ள விரும்பினான். துரோணாச்சாரியார் அவனுக்குக் கற்றுத்தர ஒப்பவில்லை. அப்படி விரும்பாததற்குக் காரணம் அருச்சுனனுக்குப் போட்டியாக அவன் வந்துவிடுவான் என்று துரோணாச்சாரியார் பயந்ததாகும். மற்றொரு காரணம் சத்திரியர் அல்லாத கீழ்ச்சாதிக்காரனுக்கு இந்த வில்வித்தையைக் கற்றுத் தரக்கூடாது என்னும் வருண தருமம். வில்வித்தையால் அன்றாட வாழ்க்கைத் தொழில் நடத்துபவனுக்கு அந்த வித்தையைக் கற்றுத்தர மறுப்பதுதான் ஆரிய தருமம். ஏகலைவன் துரோணச்சாரியார் மாதிரி ஒரு களிமண் பொம்மையைச் செய்து வைத்து மானசீகமாக வழிபட்டு வில்வித்தை பயின்று வல்லவனும் ஆனான். அவன் வல்லவன் ஆன பின்னர், வேகமாகப் பாய்கிற புலியையோ, பன்றியையோ ஒரே ஒரு கணையால் அடித்து வீழ்த்தியதைப் பார்த்துவிட்ட அருச்சுனன், துரோணாச்சாரியாரிடம் கேட்கிறான். "எனக்குத் தெரிந்த வில்வித்தை இந்த ஊரில் இன்னொருவனுக்குத் தெரிந்திருக்கிறதே, அவன் யார்?" என்று. “நான் அவனுக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை!" என்கிறார் துரோணாச்சாரியார். ஆயினும், அவன் எப்படிக் கற்றான் என்று அறிய அவனது குடிசையைத் தேடிக்கொண்டு போகிறார். அவனை