உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

103



காலை வந்தது. ஆலயப் பிரவேசத்துக்கான ஏற்பாடுகள் ஆடம்பரமாக நடந்து கொண்டிருந்தன. டாக்டர் பிச்சுமூர்த்தி ஒரு கதர்த்தொப்பி சகிதம் கோயில் டிரஸ்டியோடு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்.

கோயிற் குளக்கரையில் ஒரே கூட்டம்.

“தூக்கு... தூக்கு மெள்ளமெள்ள... மெதுவாகத் தூக்கு”

“ஹாங்.......அப்படித்தான்....”

“ஏய்... நீயுங் கூடப்போடா..."

“படி வழுக்கப் போறது; மெதுவா ஏறுங்க....”

குளத்தில் இறங்கியிருந்த ஆட்களிடம் கரையில் நின்ற கும்பல் இப்படி எச்சரிக்கை செய்து கொண்டு இருந்தது.

“சண்டாளனைக் கோயிலில் விடுகிறதுன்னா சாமிக்கே அடுக்கவில்லை... சகுனத்தடை ஏற்பட்டுவிட்டது”

இப்படி ஒருவர் பீடிகை போட்டுப் பிரசங்கம் செய்தார்.

“தலைமுறை தலைமுறையாய்க் காணாத பழக்கம் இந்த அக்கிரமத்தை ஆண்டவன் சகிப்பாரா? திருக்குளத்தையே தீட்டாக்கி விட்டாரப்பா”

—மற்றுமிருவரின் உரையாடல் இவ்விதம்.

“போயும் போயும் இன்னைக்கா விழுந்து சாகணும்? அடப்பரிதாபமே”—ஒரு இரக்க ஜீவன் இப்படிப்பேசிற்று.

“கர்ப்பவதியப்பா” ஒரு கிழவி அனுதாபப்பட்டாள்.