உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒட்டியதாய் அமைந்ததால் வேறுபடும் தோற்றங்கள் தரினும், தமிழ்ச் சமுதாய மறுமலர்ச்சிக்கு ஏதுவாகும் திறத்தால் குறிக்கோளில் ஒன்றியனவே.

அத்தகு சிறப்புடைய ஆசிரியர்கள் இயற்றிய சிறுகதைகளைத் தேர்ந்து எடுத்து இந்தக் கதைத் தொகுப்புக்களை வெளியிடும் ஆசிரியர் ப. புகழேந்தி அவர்களே புகழ்பெற்ற எழுத்தாளர். திராவிட இயக்க உணர்வுகளில் ஊறித் திளைத்தவர். உறுதி பூண்டவர். அவரால் தொகுக்கப்பட்ட இந்தத் தொகுப்புக்கள் தமிழ்மக்களின் வரவேற்பைப் பெறும் என்பதில் ஐயமில்லை.

திராவிட இளைஞர்கள் இந்தக் கதைகளைப் படித்துச் சமுதாயச் சீர்த்திருத்தத்தின் தேவையை உணர வேண்டும் என்பது என் விழைவு.

தொகுக்கப்பட்டுள்ள கதை எவையும் படிப்பவர் பொழுதுபோக்கத் துணையாகும் வெறுங்கதையல்ல; திராவிடத்தின் மறுமலர்ச்சிக்கு வழிகோலும் சிந்தனையை வளர்க்கும் சித்திரங்கள்! திராவிடத்தின் விடியலுக்கு முன்னர் எழும் சேவலின் அகவல்!