கலைஞர் மு. கருணாநிதி
15
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு விஸ்கி, பிராந்தி முதலிய மதுப் புட்டிகளின் மூடிகளை என்னிடம் வீசிவிட்டு விறுவிறு என்று போய்விடுவான். எனக்கு இரவெல்லாம் உடம்பு நடுங்கும். எங்கே போலீசார் என்மீது சந்தேகப்பட்டு என்னைக் கொண்டுபோய் மதுவிலக்குச் சட்டப்படி உள்ளே போட்டு விடுவார்களோ என்று! பிறகு எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொள்வேன், குப்பைத் தொட்டி எங்கேயிருந்தால் என்னவென்று!
ஒருநாள் மூன்றாவது வீட்டிலிருந்து என் பக்கமாகக் காரில் போன ஒருவர் சட்டைப் பையிலிருந்த ஒரு கடிதத்தைக் கிழித்து என்மீது போட்டுவிட்டுப் போய்விட்டார். பரபரப்புடன் அதைப் படித்தேன். ஒழுங்கற்ற முறையில் அது கிழிந்து போயிருந்ததால் தொடர்பாகப் படிக்க முடியவில்லை, யாருக்கோ வாத்தியாரம்மா வேலை வாங்கிக் தருவதாக வாக்களித்து இதற்குக் கைம்மாறாக முன் கூட்டியே முந்நூறு ரூபாய் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டானாம் எவனோ ஒரு எத்தன். அவன் பெயரும் தெரியவில்லை. அந்தப் பெண்ணின் பெயரும் தெரியவில்லை. இருவரின் பெயரும் அதில் இல்லை. அவை கிழிந்து பொய்விட்டன. யாராயிருந்தால் என்ன? எங்கள் ‘டிபார்ட்மெண்ட்’ விஷயம் என்பதை மட்டும் புரிந்து கொண்டேன். யாரிடம் முறையிடப்பட்டதோ அவரும் அதனைப் பொருட்படுத்தவில்லை என்பதற்கு அடையாளமாக அந்த மடலை என்னிடம் தூக்கி எரிந்து விட்டுப் போய் விட்டார். அந்தோ, பரிதாபம்! அந்தப் பெண் என்ன ஆனாளோ! அவளை நான் பார்க்காமலே இருக்க விரும்புகிறேன். அவளைப் போன்ற அபலைகளை மட்டுமல்ல, பொதுவாக மனிதர்களைப் பார்ப்பது என்றாலே எனக்கு வரவர வெறுப்பாகி விட்டது. அவர்கள் பொறுமையற்றவர்கள் - அலட்சியப்புத்தி படைத்தவர்கள்-வெறி கொண்ட-