74
சிறுகதைகள்
ஓடிப்போய் மேஜையைத் திறந்தாள். துப்பாக்கியை எடுத்தாள்.
‘டுமீல்! டுமீல்!’ என ஒலி கிளம்பிற்று.
“அய்யோ! அய்யோ!” என்ற அலறல்.
நாராயணி திகைத்தாள். அது அய்யரின் குரல் அல்லரி நாயுடுவின் குரல்தான்! ஓடிப்போய்ப் பார்த்தாள். நாயுடு அறை வாயிற்படியிலே சுருண்டு கிடந்தார். அய்யரோ; எந்த ஆபத்துமின்றி, கட்டிலுக்கடியிலே ஒளிந்திருந்தார். நாயுடுவைக் கொன்றுவிட்ட நாராயணி அவர்மீது விழுந்து புலம்பினாள்.
நகரசபைத் தலைவர் தேர்தலைப் பற்றிய கவலையைக்கூட ஒதுக்கி வைத்துவிட்டு, அதற்குள் ஒருமுறை நாராயணியைப் பார்க்க ஓடிவந்த நரசிம்ம நாயுடு. எதிர்பாராத வகையிலே நாராயணியாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், போலீசார் அப்படி வழக்குப் பதிவு செய்யவில்லை. அவர்கள் அய்யரை வீரராக்கிவிட்டார்கள். கட்டிலுக்கடியிலே ஒளிந்து மயங்கிக் கிடந்த அய்யர்தான் நரசிம்ம நாயுடுவை சுட்டுக் கொன்று வஞ்சம் தீர்த்துக்கொண்டார் என்று தீர்ப்புக் கூறப்பட்டது.
ஆயுள் தண்டனை! அந்தமட்டில் ஆண்டவன் நாராயணியின் துப்பாக்கி முனையிலிருந்தும், நீதிமன்றத்தின் தூக்குத் தண்டனையிலிருந்தும் தன்னை விடுவித்தானே என்ற மகிழச்சி அய்யருக்கு! நாராயணியோ அனாதையானாள். அய்யரோடு குடும்பம் நடத்திய வரையில் “நாராயணி அம்மாமி!” என்று ஊரார் அவளை அழைத்தனர். நரசிம்ம நாயுடு பிரவேசித்த பிறகு, “மிஸஸ் நாயுடு” என்று ஊர் கூறியது. இப்போது அவள், ‘நடுத்தெரு நாராயணி’ ஆகிவிட்டாள். முன்பெல்-