உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

77



பக்தர்கள் பலப்பல வகையினர்; கோரிய வரங்கள் பலப்பல ரகங்கள்.

“வழக்கில் வெற்றி பெறவேண்டும்.”

“வாத நோய் தீரவேண்டும்.”

“பிள்ளையில்லை; அருள் தேவை!”

“கொள்ளை போய்விட்டது; கள்ளனைக் காட்டுக!”

எல்லாவற்றுக்கும் ஒரே மருந்து... விபூதி! அதைச் சாமியார் தர பக்தகோடிகள் வாங்கிக்கொண்ட காட்சியில் ஒரே பக்தி வெள்ளம்.

“சம்பந்தம்!” என்றார் சாமியார்.

“ஸ்வாமி” என்று அலறி எழுந்தான் சிஷ்யன். அதற்குள் சின்னப்பண்ணை முதலியார் கைகட்டி வாய் புதைத்துக் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டார்.

“சங்கரன் உத்தரவிடுகிறான்; இன்றைய அருள் போதுமாம்.”

சங்கிலிச்சாமியாரின் இனிப்பான பேச்சு இது.

“அப்படியே சரி ஐயனே!” இது சம்பந்தம்.

“சாமி சயனிக்கப் போகிறது; ஜனங்களெல்லாம் செல்லலாம்” இது முதலியார்.

“அவரைப் பாரு... அப்படியே தேவலோகத்திலிருந்து குதிச்சு வந்தவரு மாதிரி இருக்கார்!”

“செக்கச் செவேர்னு... சிவபெருமான் மாதிரி! அடடா! என்ன அருள்! என்ன அருள்! அந்தக் காவி ஆடைக்கும்... கருணை வழியும் முகத்திற்கும் கைலாசபதி வந்ததுபோல் இருக்கிறதப்பா!”