பக்கம்:திருஅல்லிக்கேணி மஹாத்மியம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவல்லிக்கேணி மஹாத்மியம் அந்த பெரியோர்களுக்கு சிஸ்ரூஷை செய்துக் கொண்டிருந்தேன். அங்கிருக்கும்பார்க்கவ முனிவரைப் பார்க்கவேண்டுமென்று மேரு பர்வதத்தி லிருக்கும் மரீச ருஷியானவர் வந்தார். அவரைப் பார்க்கவருஷியும் பூஜித்து நீர் மேருபர்வதத்தி லிருந்து வருகின் றீரே அங்குள்ள தேவரிஷிகள் சமுதாயத்தில் நடந்த விருத்தாந் தமேதென்று வினவினார். மாரீசர் பார்க்கவரைப் பார்த்து அந்த மஹம்மேருவில் தேவரிஷிகள் ஹித்தர்கள் வசிஷ்டர் முதலானோர் ஏகீபவித்தார்கள். இவர்களில் வசிஷ்டர் சொன்னதாவது, தக்ஷிண திக்கிலே துளசீவனமானது பிரசித்தமா யிருக்கின்றது. அங்கே சிரேஷ்டரான அத்ரிமஹாமுநியானவர் அரியதான தபசைச்செய்து கொண்டிருக்கின்றார். அவருக்கு ஸ்ரீயபேதி பிரசன்னராய்ச் சேவை சாதிக்கப் போகின்றாரென்று வசிஷ்டர் சொன்னதாக மாரீசர் பார்க்கவருக்குச் சொன்னார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த விகடனான நான் தேவரீரைத் தண்டஞ் சமர்ப்பிக்கவேண்டி விடை கொண்டேனென்று சொல்லினர். கர்ணாம்ருதமான செய்தியைக் கேட்ட அத்ரியும் மிகவும் ஆச்சரியத்துடன் சந்தோஷித்து விகட ரைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். விகட மாமுனிவரும் அங்குள்ள முனிவர்களோடே வெகுகாலம் வாசித்துக்கொண் டிருந்தார். 11 கேட்டீரோ நாரதரே! இப்படி அந்த பருந்தாவனத்திலே ரிஷிகளுடன் கூடின அத்ரிமஹாமுனியானவர் சரத்காலம் வந்து ஆஹ்லாதகரமாய்ச் சந்திரன் பிரகாசிக்கு மொருநாள் ப்ராதக் காலத்தில் அனேக ரிஷிகளுடனே பிராதஸ்ஸந்தியைச் செய்யப் புறப்பட்டு அங்குள்ள இந்திர தீர்த்தத்திலே ஸ்நானஞ்செய்து நித் தியா நுஷ்டானங்களைத் தீர்த்துக்கொண்டு ஆஸ்ரமத்தையடைந்து அந்த ரிஷிகளுடனே ஆசனத்தி விருந்துகொண்டு ஸ்ரீயபேதியின் அனந்த கல்யாண குணவைபவங்களை யனுபவித்துக் கொண்டிருந் தார். நிர்ஹேதுகமாய் தேவதுந்துமி முழங்கிற்று.புஷ்பமாரி பொழிந்தது. தேவர்கள் ரிஷிகள் முதலான கூட்டங்கள் வந்தன. அப்சரசுக்கள் நடனஞ்செய்தனர். இப்படி ஆச்சரியகரமான சப் தத்தைக்கேட்டுத் தேவர்கள் ரிஷிகள் முதலானோர்களையுங் கண்டு அவர்களுடனே யெழுந்திருந்து நான்கு திக்குகளையும் சிஷ்யாளு