பக்கம்:திருஅல்லிக்கேணி மஹாத்மியம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவல்லிக்கேணி மஹாத்மியம் வாரீர் நாரதரே இப்படி ஸ்தோத்திரஞ்செய்த மஹாநுபா வரான அத்ரி மஹாமுனிவரைப்பார்த்து அழகியசிங்கர் அருளிச் செய்கின்றார். அத்திரிமுனிவரே ! இதராளாலே செய்யவரிதான தபசையும் ஸ்தோத்திரத்தையுஞ் செய்தபடியாலுமக்குப் பிரசன் னனானேன். என்னைத் தியானித்து துதிக்கின்றவர்களுக்கு வேண் டினவரங்களையும் என்பதத்தையுங் கொடுப்பேனாகையால் உமக்கு வேண்டினத்தைக்கேளும் என்றனர். அத்ரியும், ஸ்வாமீ, கொழுப்பு, எலும்பு, ரக்தம், தண்ணீர், மலமூத்திராதிகளாலே கட்டப்பட்டு குசிதமாய் ஹேயாலயமா யிருக்குமிந்த சரீரத்தைத் தரிக்கைக்குச் சக்தனல்லே னாகையால் முக்தியைக் கொடுத்தருள வேண்டும். அன்றியில் அடியேனுடனிருக்குமிந்த ஜாலிமஹாருஷிக்கும் முக்தி யைக்கிருபை செய்தருளவேண்டுமென்று விண்ணப்பம் செய்தனர். அழகியசிங்கர் அத்ரியை கடாக்ஷித்து அப்படியே கொடுக்கின்றே னென்றருளிச்செய்து உம் நிமித்தமாக இதராளான சகலஜனங் களுக்கும் முக்தியைக்கொடுக்கத் துளசீவனத்தாலும் சோலைகளா லும் ரம்யமாய்த் தாமரை முதலான புஷ்பங்களாலும் ஹம்சம் முதலான பக்ஷிகளாலும் நிறைந்து மனோஹரமா யிருக்கின்ற கைர விணீ புஷ்கரிணி முதலான ஸரசுக்களாலும் பிரகாசிக்ன்றது உம தாஸ்ரமமான இந்த பிருந்தாவனத்திலே பாபரஹிதர்களாகியும் பரிசுத்தர்களாசியும் மஹா நுபாவர்களாகியு மிருக்கின்ற இந்த மஹாருஷிகளானவர்கள் என்பொருட்டுத் தீக்ஷணமான வ்ருதத் தைக் கைக்கொண்டவர்களாய் வாசஞ்செய்கின்றார்கள். ஆகையால் இப்படி மனோஹரமான இந்தப் பிருந்தாவனத்திலேயே பிரம்ம ஸிகல்ப பரியந்தம் ஆத்மாக்களின் சௌக்கியத்தின் பொருட்டு வசிக்கப் போகின்றேன். வாராய் அத்ரியே; ஸம்சாரமாகின்ற மரு காந்தாரத்தில் சஞ்சராத்தாலே யுண்டான தாபத்திரை யாதுராளா புத் பகவதலாப க்கிலேபரத்தாலே துக்கிதாளாயும் புத்திஹீனாளாயு மிருக்கின்ற மநுஷ்யாள்ஹிதத்தின் பொருட்டு அனேககால மிங்கே வசிக்கின்றேன். வாராய் அத்ரியே! கர்மத்தாலே துக்கமுண்டாகும் அத்தால் குரோதமுண்டாகும், அத்தால் அக்யான் முண்டாகும் அத்தால் பாபங்களுண்டாகு மாகையால் சேதனர்கள் ஸம்சாரமா சமுத்திரத்திலே மூழ்கிப் பாபங்களைப் பெருக்கச்செய்து பூரந்தா மனான என்னைக் காரணபூதனென் றறியாமல் நசித்து நரகத்திலே 13