பக்கம்:திருஅல்லிக்கேணி மஹாத்மியம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவல்லிக்கேணி மஹாத்மியம் கைரவிணி தீர்த்த மஹிமை. வாரீர் நாரதரே! அந்த பிருந்தாவனத்திற்கும் அல்லித்தா மரை ஹம்ஸாதிகளால் அலங்கிருதமான கைரவிணி தீர்த்தத்திற் கும், காசியும் கங்கையும் சமமாகமாட்டாது. ஜன்மஸஹஸ்ரங்க ளிலே கங்கையில் ஸ்நானஞ் செய்கின்றதைப் பார்க்கிலும் ஒரு கால் கைரவிணி தீர்த்தத்தில் ஸ்நானஞ் செய்கை விசேஷம். அதற் சந்தேஹமில்லை. கங்கையில் ஸ்நானஞ் செய்கின்றவர்கள் புண்ணிய பலன்களையடைந்து புண்ணியம் க்ஷணமானால் பிறவிசா கரத்தை யடைவார்கள்; கைரவிணியில் தீர்தமாடினால் சித்தமாகப் பாபங்களெல்லாம் போய்ப் பரிசுத்தர்களாகி மோக்ஷத்தை யடை வார்கள். அதன்வைபவத்தை யார்தான்சொல்ல மாட்டுவர்கள். 25 வாரீர் நாரதரே! வியாக்ரஜன்மா வானவர் ஸ்ரார்த்தூலரை பார்த்துச்சொல்லுகின்றார். ஒருகால் விசுவாவசுவென்னுந் கந்தரு வன் ஆகாசமார்க்கத்தில் சஞ்சரித்துக் கொண்டு வருகையில் ஹிமோக்கிரியின் மூன்றுசிகரங்களுள் மேற்கு பாகத்திலுள்ள ஓர் சிகரத்திலிருக்கும் அரஜஸ் என்னுந் தீர்த்தக்கரையில் தபசுசெய்து கொண்டிருந்த, அத்ரிபுத்ரரான தூர்வாசர்மீது அந்தக்கந்தருவன் நிழல்படக்கண்ட தூர்வாசரும் அசரீரியாய் போகக்கடவா யென்று சபித்தனர். அவனும் சாபத்தைப் பெற்றுக் குபேரனையடைய அவன் சிவபிரானை நோக்கித் தபசுசெய்தால் சாபவிமோசனமாகு மென்று சொல்லக்கேட்டு என்னைவந்தடைந்து என் லே கைர விரி தீர்த்தத்திலே ஸ்நானஞ்செய்து சாபவிமோசனமாகி எதா ப்ரகாரந் தேஹத்தையடைந்து சுகித்திருந்தான். கார்த்திகை மாதக் கிருஷ்ணபக்ஷத்து அஷ்டமிதிதியில் யாவர் கைரவிணியில் கிராத்தஞ்செய்கின்றார்களோ அவர்களின் பிதுருக்கள் திருப்தி யடைந்து மோக்ஷத்தை யடைவார்கள். அந்த கைரவிணி புஷ்கரி ணிக்கு உத்தரபூர்வதிக்கில் இந்திரதீர்த்த மொன்றுண்டு. அதில் ஸ்நானஞ்செய்து அசுவதானஞ்செய்யவேண்டும். கைரவிணிக்குத் தெக்ஷிணபாகத்தில் சோமதீர்த்தமொன்றுண்டு. அதில் ஸ்நானஞ் செய்து பால் தயிர் வெண்ணெய் பட்டுவஸதிரம் தானஞ்செய்ய வேண்டும். கைரவிணிக்குத் தென்மேற்குதிக்கில் மீனதீர்த்தமொன் றுண்டு அதில் ஸ்நானஞ்செய்து முத்து, பவளம், தேன், நெய் .