பக்கம்:திருஅல்லிக்கேணி மஹாத்மியம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

திருஅல்லிக்கேணி மஹாத்மியம்

வாருங்கோளென்று நியமித்தார். ருஷிபத்னிகளும் அப்படியே யாகட்டுமென்று சொல்லி மிகவும் ஆதராதிசயத்துடன் வளர்த்து வந்தார்கள். இப்படி நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்துகொண்டு வருங்குழந்தைக்கு ஒரு நல்லநாளில் ருஷிகளுடன்கூடி பிருகுவானவர் வேதவல்லி என்று திருநாமஞ்சாற்றினர்.

வேதவல்லியும் ருஷிகளுக்குச் சிஶ்ரூஷை செய்து கொண்டு சிலகாலம் வசித்திருக்கையில் க்ஷீராப்திநாதன் ஸ்ரீமாஹா லக்ஷ்மியைக் கடாக்ஷிக்கும் பொருட்டு இராஜவடிவு கொண்டு அந்தப்பிருந்தாவனத்தையடைந்தார். அங்கு ஸகிகளோடு புஷ்பம் பறித்துக்கொண்டிருந்த வேதவல்லியைக்கண்டு வியாமோஹங்கொள்ள அவளும் தன்பிதாவான பிருகுவுக்கறிவிக்க அவரும் அந்த மஹா புருஷனைக்கண்டு இவர்சாக்ஷாத் ஸ்ரீ மாஹாவிஷ்ணு வென்றறிந்து வேதவேதாந்தங்களினாலே பல்லாயிரக்கோடி அண்டங்களுக்கும், நாதனே பிரம்ஹருத்ரேந்திராதி தேவர்கள் முதலானோர்களுக்கும், காரணபூதனே மந்நாதனே என்றிப்படிப்பலவாறாக ஸ்தோத்திரஞ் செய்து சாஷ்டாங்க தண்டஞ் சமர்ப்பித்துத் தேவரீர் அப்பிராகிருத திவ்யமங்கள விக்ரஹஸ்வரூபத்தைச் சேவைசாதித்தருள வேண்டுமென்று பிரார்த்தித்து பத்தாஞ்சலியுடராய் நின்றுகொண்டிருந்தார்.

வாரீர் நாரதரே! இப்படிப் பிரார்த்தித்த பிருகுமாஹாருஷிக்கு க்ஷராப்திநாதனான ஸ்ரீமந்நாராயணன் தன்நிஜஸ்வரூபமான சதுர்ப்புஜ சங்குசக்ரமகரகுண்டல கிரீடக்கிரைவேய கௌஸ்துப ஹார வைஜயந்திவனமாலிகாதி திவ்யாயுத திவ்யபூஷண திவ்யமங்கள விக்ரஹஸ்வரூபத்தைச் சேவைசாதித்தருளினர். பிருகுமுனி வரும் ஸாஷ்டாங்கமாகத் தண்டஞ்சமர்ப்பித்து ஆனந்தித்துப்பல வாறாக ஸ்தோத்திரஞ்செய்தனர். அப்போது ஆழிவண்ணன், அவரை நோக்கி வேண்டினவரங்களைக் கேளுமென்று அருளிச்செய்ய, பிருகுமஹாருஷியும் ஸ்வாமி! இந்தத் திவ்யமங்கள விக்ரஹஸ்வரூபத்துடன் இந்தப் பிருந்தாவனத்திலே அடியேனுக்கும், மார்க்கண்டேயருக்கும் மற்றும் சமஸ்தாத் மாக்களுக்கும் எப்போதும் சேவைசாதித்துக்கொண்டெழுந்தருளி இருக்கவேண்டுமென்றுபிரார்த்தித்தார். அருமாகடலும் அப்படியே சேவைசாதிக்கின்றோ