பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அறன் வலி யுறுத்தல் 169 கண் எழன் உருபாப் இடத்தை உணர்த்தி வரும் ஆயினும் தொனிப்பொருள் தனித்த வகையில் இங்குதுனித்துணரவக்கது. மனத்துக்கு மாசு ஆவது சேமான தீமைகளை கேசமா மருவி யிருத்தல். தீய நினைவுகளால் மனம் தீமை அடைகிறது; அடை யவே அவன் பாவி ஆகிருன்; ஆகவே கருமத்துக்கும் அவனுக் கும் யாதொரு தொடர்பும் இல்லாமல் கொலைந்து போகிருன். மாசு இலன் என்றது அந்த இன்மையின் கன்மையும் சன் மையும் நாடி அறிய. வெளியே தாசி படிதல் போல் உள்ளே மாசு படியும். அவ்வாறு படியாதபடி மனத்தைப் பாதுகாத்து வருவோரே புனித முனிவராப் மனித சமுதாயத்தில் இனிது திகழ்கின்றர். மாசு கழிந்து வரக் கேசு தெளிந்து வரும். சினமாசு ஒழித்து, மனமாசு திர்த்து, அறச்செவி திறந்து, மறச் செவி அடைத்து. (மணிமேகலே, 9) புத்தர் பெருமான் மாசு தீர்ந்த கேசு மிகுந்து திவ்விய கிலையில் இருக்க தலைமையை இது வரைந்து காட்டியுள்ளது. மாசு அற இமைக்கும் உருவினர்; இகலொடு செற்றம் நீங்கிய மனத்தினர். (முருகு) மாதவர் நீர்மையை இதில் கூர்மையாக் காண்கிரும். மாசு நீங்கி இவ்வாறு மனம் தாயராயபோது அந்த மகான் களிடம் அதிசய மகிமைகள் பெருகி வருகின்றன. "மனமது செம்மையானுல் மந்திரம் செபிக்க வேண்டாம். ' என்ற து அதன் மகிமையைத் தகைமையா விளக்கி கின்றது. சித்த சுத்தியுடையவன் எல்லா நன்மைகளையும் ஒருங்கே அடைந்து கொள்ளுகிருன்: அதிசய சித்திகள் அவனிடம் வரு கின்றன. நித்திய முக்தியும் அவனே நேசித்து நிற்கிறது. கற்றதம் கல்வியும் கடவுட் பூசையும் கற்றவம் இயற்றலும் நவையில் தானமும் மற்றுள அறங்களும் மனத்தின் பால் அழுக்கு அற்றவர்க்கே பயன் அளிக்கும் என்பரால். (காசி காண்டம்) o?