பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கடவுள் வாழ்த்து 19 சொல்லுகின்ற ஒருவன் எவ்வளவு அறிவுடையவன் ஆயி லும் கேட்கின்றவனுடைய உணர்ச்சி அளவே பொருளை உணர்த்த முடியும் என இது உணர்த்தியுள்ளது. கல்விப் பயிற்சி யால் உயர்ச்சி அடைந்தபோது அந்த மனிதனிடம் உணர்ச்சி ஒளி வீசி வருகிறது. எழுத்தறிவு ஒரளவு இறைவனே அறிய உதவி ஆகிறது. அங்க ஆக்கத்தை நோக்கியே அகரத்தை ஈண்டு அறிய வைத்தார். மூலமுகலை ஞாலம் தெரியக் கோலவரிவங்கத. இப து தேவர் அருளியுள்ள திருக்குறள் சம் தாய்மொழிக்கே கனியுரிமையுடையது; தமிழ்ச் சுவை முழுவதும் கழுவி விழுமிய கலைகள் யாவும் கெழுமி தமிழுக்கே பெருஞ்சிறப்பாக அமைக் துள்ள தனி முதல் நூல் என்பதைச் சில குறியீடுகளால் துணுகி உணர்த்து உறுதி நிலைகளை ஒர்ந்து தெளிந்து கொள்ளலாம். த மி ழ் எழுத்துக்கள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிந்துள்ளன. ஆதியும் அங்கமும் ஓதி உணர வந்துள்ளன. அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது. (தொல்காப்பியம்) என ஆசிரியர் தொல்காப்பியனர் இவ்வாறே தமது நூலைத் தொடங்கியிருக்கிரு.ர். அங்க மரபின் வழியே தமிழ் மொழி கிழைத்துள்ளது. அம்முறைமையைத் தழுவித் திருக்குறளும் வந்துளது. என்னே வரவு? எனின், பின்னே நோக்குக. அகரமுதல என முகலில் தோன்றி முயங்கப் பெறின் என்று முடிவில் முடிந்துள்ளமையால் மொழியின் கிழமை தெளிய லாகும். அநூல் தோன்றி முடிந்துள்ள நிலை ஊன்றி உணரவுரியது. தமிழ் எழுத்துக்கள் உயிரும் மெய்யும் என இருவகையாய் முப்பது என்னும் ஒரு தொகையுள் அடங்கும். அவை உயிர்க் கனம், வன்கணம், மென்கணம், இடைக்கணம் என நான்கு பிரிவுகளாம். அந்த உயிரும் இனமும் கடவுள் வாழ்த்தில் கிரலே நேர்ந்திருக்கின்றன. அ, க, ம, வே என்னும் இக்க நான்கு எழுத்துக்களையும் முதலில் கொண்ட பாசுரங்கள் முறையே வங் துள்ளன. இங்கனம் கணங்கள் நான்கையும் காட்டி முடிக்கயின் ஐங்காவது குறளே இகரத்தில் தொடங்கியிருப்பது எண்ணி உணர வுரியது. உரிமையானமொழியை அருமை.நூல் ஒளி செய்துளது.