பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 திருக்குறட் குமரேச வெண்பா வயங்கிணர்த் தாரோன் மகிழ்ந்து செல்வுழி' (சிலப்பதிகாரம், 2) தன் மனைவியுடள் மருவி இவன் உவந்து வாழ்ந்து வந்துள்ள கிலையை இளங்கோவடிகள் இங்கனம் வரைந்த காட்டியிருக்கி ருர். இன்னவாறு சுகபோகமாய் இனிது மகிழ்ந்த வந்த இவன் ஒருநாள் மாதவி என்னும் கணிகையைக் கண்டான். அவள்மேல் காதல் கொண்டான். தனது அருமை மனைவியை மறந்தான்; அவளோடு மருவி மகிழ்க் த மையலாயிருக்கான்; அவளால் பொருள் முழுவதையும் ஒருங்கே இழந்தான்; வறியனயினன்; அதன்பின் உரிய மனைவியிடம் பிரியமா வந்தான்; தன் கணவன் கிலைமையைக் கண்டு கண்ணகி உருகி மறுகினள். தனது காலில் அணிந்திருந்த அழகிய பொற்சிலம்பைக் கழற்றிக் கோவலன் கையில் கொடுத்தாள். இதனை விலைப்படுத்துங்கள்; அந்தப் பொருளைக் கொண்டு நாம் இருவரும் இனிது வாழலாம்' என்று கணவனைத் தேற்றினுள். அவனும் தேறினன்; விலைஉயர்ந்த அச் சிலம்பை விற்கும் பொருட்டு மனைவியோடு மதுரைக்குச் சென் முன். விலை செய்ய முயன்றபோது தீயவன் ஒருவனல் கொலை யுண்டு இறந்தான். கொடிய துயரங்களும் செடிய பழிகளும் நீண்டு விளைந்தன. அறத்தால் வந்த அருமை மனைவியோடு இன் பம் நுகர்ந்து வந்தவன் புறத்தே விலகினமையால் பொல்லாக துன்பங்களையும் புலையான பழிகளையும் அடைந்தான். அறத்தான் வருவதே இன்பம்; மற்று எல்லாம் துன்பமே; பழியே என்பதை உலகம் இவன்பால் உணர்ந்து கின்றது. அன்புறும் அறத்தில்ை அடுக்கும் இன்பமே இன் பெனத் தக்கதால் ஏனே இன்பெலாம் அதுன்பமும் பழியையும் தோற்றும் ஆதலால் வன்பறும் அறத்தினே மறப்பின் கேடுறும். (விநாயகபுராணம்) அறத்தைக் கழுவி வாழ்வதே வாழ்வு; கழுவின் காழ்வாம். புண்ணியத்தால் எய்தும் புனிதசுகம் அன்னதையே எண்ணி ஒழுகல் இனிது. தருமத்திலேயே இன்பம் மருமமா மருவியுளது.