பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மக்கட் பேறு 307 இனிமையாய் வரும்; இசையா வழி அவை யாதம் அசையா மல் கிடைக்கும். உயிர் ஒலி எதிரே உடல் ஒலிகள் ஒழிகின்றன. வேகளையோடு எவ்வழியும் செவ்வையாய்த் தோப்க்க மொழியும் குழவிகளின் மழலை மொழியோடு குழல் யாழ்களின் ஒலிகள் ஒப்பாகா. அயலார் ஊத ஒலிக்கும் ஒசையினும் இயல் பான உயிர் ஓசை உயர்வாப் ஒளிவீசி உவகைசுரக்க வருகிறது. மழலை = இளமை கணிக்க இனிய சொல். பொருளோடு பொருங்காமல் குழறிப் பேசிலுைம் பிள்ளை களுடைய மழலைச் சொல் உள்ளத்தை உருக்கி உவகையை விளைக்கும் ஆதலால் இனிய இசைகளினும் கனிமகிமையாப்அது இனித உயர்க்ககின்றது யாழும் குழலும் தாழ மழலைவாழ்கிறது. யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா பொருளறி வாரா ஆயினும் தந்தையர்க்கு அருள்வங் தனவால் புதல்வர்தம் மழலை; என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னர் கடிமதில் அரண்பல கடந்த நெடுமான் அஞ்சிரீ அருளன் மாறே. (புறம், 92) பிள்ளைகளின் மழலைச்சொல் யாழினும் விழுமிய இனிமையத; தந்தையர்க்கு எந்தவழியும் அக சிக்கை களிக்கச் செய்யும் என ஒளவையார் அதிய மானே நோக்கி இவ்வாறு கூறியிருக்கின்ருர், குழவி தளர்நடை காண்டல் இனிதே: அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே. (இனியவை,15 குழவி மழலை அமிழ்தினும் இனிது எனப் பூதம்சேந்தனர் என்னும் சங்கப் புலவர் இங்கனம் நயமாக் குறித்துள்ளார். கல்லா மழலைக் கணியூறல் கலந்து கொஞ்சும் சொல்லால் உருக்கி அழுது ஒடித் தொடர்ந்துபற்றி மல்லார் புயத்தில் விளேயாடு மகிழ்ச்சி மைந்தர் இல்லாதவர்க்கு மனே வாழ்வின் இனிமை என்னம்? (பாரதம்) பாண்டு மன்னன் இன்னவாறு கருதி யுள்ளான். சொன்ன கலேயின் துறையனேத்தும் தோய்ந்தாலும் என்ன பயன்உடைத்தாம் இன்முகத்து-முன்னம்