பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மக்கட் பேறு 317 எவ்வழியும் பேருவகை புற்ருர்? எனின், தம் மக்கள் அறிவுடை மை தம்மின் மாநிலத்து மன் உயிர்க் கெல்லாம் இனிது என்க. தன் மகனுக்குக் கங்கை கல்வியறிவை கல்க வேண்டும் என்று முன்பு கூறினர்; இதில் அந்த அறிவு பலருக்கும் பயனும் என்கின்ருர், தம் என்றது கங்தை காயரை. இன் உருபு எல்லைப் பொருளது. அளவு காட்டியது உவகையின் உளவு காண. தம் மக்களுடைய கல்வி அறிவு அவரைப் பெற்றவராகிய தம்மினும் உலகத்திலுள்ள எல்லார்க்கும் மிக்க இன்பம் கரும் என்பதாம். மதிநலம் உடையவரே மக்கள் என அறியகின்றனர். மன் உயிர் என்றது உன்னி யுனா வந்தது. ஒருவன் அறி வுடையன் ஆளுல் கெறியும் நீர்மையும் பெருகி அருள் நலம் மரு விப் புலை கொலை ஒருவி நெறிமுறையே ஒழுகுகின்ருன்; சல்ல அந்த ஒழுக்கத்தால் எல்லாஉயிர்களும் நலமா இன் புறுகின்றன. அறிவு உயிரின் ஒளியாப் எவ்வழியும் இதம் புரிவது ஆக லால் அதனைத் தகுதியாக வுடையவரால் வையம் மிகுதியா இன்பம் அடைகிறது. பல உயிர்களும் பயன் அடைய வுரிய நயனை அறிவைக் தன் மகனுக்கு ஒரு தங்தை வியன விழைந்து தருவது உலகத்துக்கெல்லாம் ஒருங்கே நன்மை செய்தபடியாம். கிலத்தில் ஊன்றிய வித்து மரமாய் வளர்ந்த பலர்க்கும் இனிய கிழலைத் தருகிறது; தன் குலத்தில் பிறந்த குழவிக்கு ஒரு தந்தை ஊட்டிய விக்கை பெரிய அறிவா வளர்ந்து எல்லாருக்கும் இன்பகலங்களை அருளுகிறது. உயர்மதியால் உலகம்உவக்கிறது. இத்தகைய அறிவு கலங்களைத் தம் மக்களுக்கு ஊட்டி பருள்பவர் பெரிய புண்ணியங்களை ஈட்டிய புனிதராகின்ருர். சிறந்த கவிஞர்கள், உயர்ந்த ஞானிகளுடைய உணர் வொளிகளால் உலகம் அடைந்து வரும் உறுதி கலங்களை ஈண்டு ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். அந்தப் பெரியவர்களின் அறிவுடைமை அவரைப் பெற்றவரினும் பேருலகம் மகிழவுறப் பெருகியுளது. ஞாலம் இன்புற மேலோர் அறிவ நலம் புரிகிறது. கம்பர்பிரான் கலையறிவு கதிர்ஒளிபோல் ஒளிவீசி இம்பர்எல்லாம் இன்பம் உற எழில்விசி யுள்ளதுகாண்!" என்பது இங்கே கருதி கோக்கி உறுதி உணரத் தக்கது.