பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 திருக்குறட் குமரேச வெண்பா அண்ணுவோ! அண்ணுவோ! அசுரர்கள்தம் பிரளயமே ! அமரர் கூற்றே!. (இராமா, இராவணவதை 220) இராவணன் இறந்த போது விபீடணன் இவ்வாறு கரைந்து அழுதுள்ளான். எவ்வளவு மறைந்திருக்காலும் அன்பு விழிரோல் பலரும் அறிய வெளியாம் என்பதை இதுவும் தெளிவாக்கியுளது. உள்ளமுறும் அன்பை உரைசெயலும் கண்ணிரும் கள்ளமறக் காட்டும் கனிந்து. அன்பு கிலையை அழுகையால் அறியலாம். = 72 மோனத் ததிசி முதுகெலும்பை வானவர்தம் கோனுக்கேன் தந்தான் குமரேசா-ஞானமுறும் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. )ع( இ-ள். குமரேசா கதீசி முனிவர் தமது முதுகு எலும் பையும் இந்திரனுக்கு என் கக்கார்? எனின், அன்பு இலார் எல்லாம் தமக்குஉரியர்; அன்புஉடையார் என்பும் பிறர்க்கு உரியர் என்க. இல்லாாைமுதலில்குறித்தது எங்கும்.அவர்பெருகியுள்ளமைகருதி. அன்பின் இயல்பை முன்பு நன்கு உணர்த்தினர்; இதில் அதனையுடையாரது விழுமிய செயலை நயமா உணர்த்துகின் ருர், வாழ்க்கைக்கு உரிய பொருள்கள் பல வகை நிலைகளில் பரவியுள்ளமையால் எல்லாம் என ஒரு தொகையாத் தொகுத்து உரைத்தார். தமக்கு உரியர் என்ற த பிறர்க்கு பாதும் உதவார் என அப்பேயாது ஈயாத தீய கிலே தெரிய வந்தது. என்பு என்றது. உடம்பினை உயிர்க்கு ஆகாரமாயுள்ள அதன் உயர்வை உம்மை உணர்த்தி கின்றது. எவரும் எளிதில் ஈய முடியாத அரிய இனிய உரிமைப் பொருள் பெருமையா ஈண்டு அறிய வந்தது. உடலையும் உதவுகிற உயர்வு உணரவுரியது. அன்பு இல்லாதவர் யாதும் பிறர்க்கு ஈயார், எல்லாம் தமக்கே உரிமையாக் கழுவி இழிவர்; அன்புடையவர் அ ரி ய உடம்பையும் இனிய உயிரை պւք பிறர்க்கு உரிமையா உதவுவர்.