பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&44 திருக்குறட் குமரேச வெண்பா கருதி நெருங்கினுள்; இவர் மோனமாய் ஒருவி நீங்கினர்; முன்பு வைத்த இடத்தில் தமத உடலை நாடி வந்தார்; அதனை அங்கே காணுமையால் இறைவன் ஆணை என்று கருதித் தனியே வங்க ஒரு கருவின் அடியில் தங்கிக் கவயோகத்தில் இருக்கார். அவ் வாறு தங்கி யிருக்கபோது அரிய பல கவிகள் பாடினர். மனித சமுதாயம் புனிதமாய் உய்ய வேண்டும் என்ற கருணையோடு இவர் பாடிய பாடல்கள் திருமந்திரம் என்னும் பேரால் சிறந்து விளங்கி நிறைந்த பொருள் வளங்களை வழங்கி வருகின்றன. உயர்ந்த தவ யோகியான இவர் பசுக்களிடம் கொண்ட அன்பால் இடையன் . டம்பில் புகுந்து கண்ணளியோடு புரக்க ஞாலம் இன்புற ல ம் பல புரிந்துள்ளார். ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு அன்போடு இயைந்த வழக்கே என்பதை உலகம் கண்டு தெளிய இவர் கன்கு உணர்த்திகின்ருர், அன்பு செய்யவே என்புடம்பு எடுத்த இவர் அன்பின் அருமை பெருமைகளைக் குறித்துப் பல பாடல்கள் பாடியுள்ளார்; கவிகள் யாவும் அரிய சுவைகளுடையன.சில அயலேவருகின்றன. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்; அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்; அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. (1) அன்பின உள் ளான்புறத் தானுட லாயுளான் முன்பினுள் ளான் முனி வர்க்கும் பிரானவன் அனபினுள் ளாகி அமரும் அரும்பொருள் அன்பினுள் ளார்க்கே அனேதுனே ஆமே. (2) இன் அன்புருக்கி இறைவனே ஏத்துமின்! முன்அன்புருக்கி முதல்வனே காடுமின்! பின் அனபுருக்கிப் பெருந்தகை நந்தியும் தன் அன்பு எனக்கே தலைகின்ற வாறே. (3) என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப் பொன்போல் கனலில் பொரிய வறுப்பினும் அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி என் போல் மணியினே எய்தஒண் னதே. (4) (திருமந்திரம்)