பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அன்புடைமை 349 75. தேடுகின்ற இன்புற்றும் சேரமான் ஏனன்பால் கூடுசிறப் புற்ருன் குமரேசா-நாடுகின்ற அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்ருர் எய்தும் சிறப்பு. (டு) இ-ள். குமரேசாl இன்ப வளமுடைய சேரமன்னன் அன்புடை மையால் ஏன் பெருஞ் சிறப்பு அடைந்தான்? எனின், வைய கத்து இன்புற்ருர் எ ப்கம் சிறப்பு அன்புற்று அமர்ந்த வழக்கு என்க. மேன்மையான இன்பங்கள் அன்பால் அமைகின்றன. உற்று அமர்ந்த = பொருக்தி யிருக்க. உறுதியாய் நன்கு அமைந்திருக்க கிலைமையும் தலைமையும் நேரே தெரிய வந்தது. அன்பால் ஆர்வமும் நண்பும் விளையும் என்று முன்பு குறித் தார்; இதில் இன்பமும் சிறப்பும் ஒருங்கே எய்தம் என்கினருள். இன்ப நலங்களை நாடியே யாவரும் யாண்டும் ஆவலோடு திரிகின்றனர்; அவை எளிகே எய்தும் வழி இங்கே விழிதெரிய வங்களது. உள்ளம் அன்பாய் வர உலகம் இன்பாப் வருகிறது. இவ்வுலகில் இனிய இன்பங்களை அடைந்தவர் மேலும் அரிய சிறப்புகளை எ ப்துவது முன்பு அன்பு அமைந்து வந்த பலனே என்பதாம். ஆகவே அதனை மேலும் பேணி மேன்மை காணுக. நீ இன்புற வேண்டின் பாண்டும் அன்பு புரிய வேண்டும் என மனிதனுக்கு இனிய ஒரு போதனையைத் தேவர் ஈண்டு விநயமா விளம்பி யுள்ளார். காரணகாரிய உரிமைகள் கருதி உணர உரியன. உரிய பிரியம் அரிய சுகங்களை அருளுகிறது. அன்பான செயலும் சொல்லும் எவ்வுயிர்க்கும் இன்பம் விளைத்து வரும்; அவ்விவிைன் பயன் பெருகி நீண்டு முன்பு செய்த உயிரிடம் மீண்டு வந்து சேரும்; சேரவே அந்த மனிதன் கருவிலே திருவுடையனப் அரிய பெரிய சுகபோகங்களே மருவி மேலும் மேலும் சிறந்த மகிமைகளையும் உயர்ந்த பதவிகளையும் எளிகே எய்தி ஒளிமிகுந்து மகிழ்கின்ருன்; அதிசயமான இந்த ஆனந்த நிலைகளுக்கெல்லாம் அன்பே மூலகாரணம் ஆகலால் அதன் கோலமும் குறியும் இங்கனம் ஞாலம் காண வந்தன.