பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது அதிகாரம். வி ரு ந் தோம் பல் அஃதாவது விருக்தினரைப் பேணுகல். கன்பால் வந்தவரை உபசரித்து உணவூட்டி ஆதரிப்பது இல்வாழ்வானுடைய கடமை உரிமையைச் செய்வது பெரிய கருமமாம். அது அன்புடைமை யால் நன்கு நடைபெறும் ஆகலால் அகன்பின் இது வந்தது. 81. ஈட்டும் பொருளே எல்லாம் ஏன்விருந்தைப் பேணுதற்கே கூட்டினரப் பூதி குமரேசா-நாட்டில் இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. (க) இ-ள். குமரேசாl அப்பூதியார் ஈட்டிய பொருண் எல்லாம் விருக் தினர்க்கே என் உகவிஞர்? எனின், இருந்த ஒம்பி இல்வாழ்வது எல்லர்ம் விருந்து ஒம்பி வேளாண்மை செப்தற் பொருட்டுஎன்க. வாழ்வின் வளமை கிழமையா உணர வக்கது. இருந்து = கிருந்திய சீரோடு அமர்ந்து. ஒம்பி= வாழ்க்கைக்கு உரிய வசதிகளைப் பேணி. இருத்தலும் ஒம்பலும் வாழ்வின் திருக்கங்களாய் கின்றன. இல்லின் கண் இருந்து இகமாப் வாழும் வகை யாவும் விருத்தினரைப் பேணி நயமா ஆதரிக்கும் பொருட்டேயாம். பொருளை யுடையது பொருட்டு என வந்தது. வாழ்க்கைக்கு வேறு பொருள் இல்லை; வேளாண்மை புரிவதேயாம். இந்த உபகார சீர்மை உயிர் வாழ்வைப் புனிதமாஉயர்த்தியருளுகிறது. விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே. (தொல்காப்பியம்) விருந்து மொழிக்கு இயல் ஆசிரியர் இவ்வாறு பொருள் கூறியுள்ளார். புதியது என்னும் பொருளேக் குறித்து வருகிற விருந்து என்னும் சொல் புதியராய் வருகின்ற விருத்தினரை உணர்த்தியுள்ளமையால் அவரது கிலைமையைத் தெரிகின்ருேம். 48