பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பொறை யுடைமை 691 _ருக்கு மிகுந்து பிறர் செய்கிற சிறுமைகளை மறந்துவிடுவது _ என்பதை உலகம் தெளிய இவர் ஒழுகி உணர்த்தினர். உள்ளிப் பொறுக்கும் உரவொரின் உள்ளாமே தள்ளி விடுவார் தலை. பிறர் பிழையை மறந்து விடுக.

  • ==

108 தூதுசென்ற கண்ணன் துரியோ தனன்செய்த கோதேன் பொறுத்தான் குமரேசா-யாதொன்றும் இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை (E) இ-ள். குமரேசா தனது சென்றபொழுது துரியோதனன் செய்த கொடிய பிழைகளைக் கண்ணன் என் அமைதியாப்ப் பொறுத்து மின்முன்? எனின், விருந்து ஒரால் இன்மையுள் இன்மை; மடவார்ப் பொறை வன்மையுள் வன்மை என்க. விருத்தினரைப் பேணுத விடுதல் வறுமையுள் மிக்க வறுமை; மடையாது பிழையைப்பொறுத்தல் வலிமையுள் மிகுந்த வலிமை, இன்மையும் வன்மையும் இனிமையாக் காண வந்தன. அரிய பொறுமையை இங்கே சொல்ல வந்தவர் கொடிய வறுமையையும் ஒருங்கே கூறியருளினர். வறுமை படியாமல் பொறுமை படிந்து எவ்வழியும் செப்வன செவ்வையாச்செய்து மனிதன் இனிது வாழவேண்டும் என்பது ஈண்டு உணர வங்க.த. ஒருவன் ஈட்டி வருகிற செல்வத்துக்கு உரிய பயன் விருங் கை ஊட்டி வருவதே; அவ்வாறு விருத்தினரைப் பேணுக ஒழி யின் அவன் யாகம் இல்லாதவனப் இழிந்து பழியுறுகின்ருன். வந்த அதிதியை ஒருவிய அளவு கிங்கை அதிகமா மருவுகின்றது. ஒரால் = நீக்கல் ஆல் தொழிற் பெயர் விகுதி. கல் விகுதி பெற்ருல் ஒருவுதல் என வரும். கழுவுதல், தழால் என வருகிறது. போர்எதிர் வேந்தர் தார்.அழிந்து ஒராலின். (பதிற்றுப்பத்து, 28) ஒரால் இதில் உணர்த்தி கிற்கும் பொருளை அறிக.