பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. செய்ந் நன்றி அறிதல் 475 வரை = அளவு. அதனையுடையது வரைத்து ajr{5,7 வந்தது. அண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல் என அளவுகள் பல வகை யில் உள்ளன. அவை யாவும் தொகையா இதில் மேவி கின்றன. சால்பு= இனிய குண நீர்மைகளின் கிறைவு. அதனையுடைய வர் சான்ருேர் என நேர்ந்தார். நீர்மையால் உயர்ந்த இந்தச் ர்ெமையாளரிடம் திவ்விய மகிமைகள் நன்கு சேர்ந்துள்ளன. செயப் பட்டார் என்றது செய்யும் உதவியை எப்துகின்ற வர். தினை அளவு நன்றியையும் பனை அளவா மேலோர் கருது வர் என முன்பு கூறினர்; இதில் அணு அளவு உதவியும் சான் ருேர் பால் மலையளவா உயர்ந்து வரும் என உணர்த்து கின்ருர். உதவி செய்ய வுரியவர் உரிமையாப் இங்கே தெரிய வந்தனர். செய்யும் உதவி அதன் அளவில் இல்லை; அதனைப் பெற்றுக் கொள்பவரது பெருமை அளவே பெருகியுள்ளது என்பதாம். நல்லவர்க்குச் செய்த உபகாரம் நலமாய் உயர்ந்து வரும்; பொல்லாதவர்க்குச் செய்தது புலேயாப் இழிந்த ஒழிந்து போம். கல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் கானுமே--அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் ர்ேமேல் எழுத்திற்கு கேர். (மூதுரை) சேர்ந்தவரது கிலேயின் அளவே உதவி சேர்ந்து கிற்கும் என் பதை இகளுல் கேரே ஒர்க்க உணர்ந்து கொள்ளுகிருேம். பசுவுக்கு நீர் ஊட்டினல் பாலே கரும்; பாம்புக்குப் பால் வார்த்தாலும் விடமே விரிந்து வரும். அதுபோல் செப்த உதவி சிறிதே எனினும் கல்லோர் பாலாயின் மேலான கன்மையாம்; பெரிதானுலும் தீயோரிடம் சேரின் சிறுமையா யிழிந்து ைேமயே யாம். உயர்வும் தாழ்வும் இயல்புகளால் இசைகின்றன. தக்கவர்க்கு உதவுவதே மிக்க மேன்மையாம். மாண்புடை யாளர் கேண்மையர் தத்தம் வழிமுறை ஒழுக்கினில் அமர்ந்தோர் சேண்படு கிரப்பின் எய்தினேர் புரப்போர் தீர்ந்தவர் தங்தைதாய் குரவர்