பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1350 திருக்குறட் குமரேச வெண்பா சரிதம். இவர் சாமபுரி என்னும் ஊரில் இருக்கவர். தீமையான செயல்களையே செய்து யாண்டும் செருக்கிகின்ருர். உழவு முதலிய தொழில்களைச் செய்யாமல் களவு வழிகளையே பழகிக் களித்து வந்தார். அந்த வகையில் பொருளும் பெருகி வந்தது; வரவே குறுகிலக் கலைவர் போல் பெருமிக மடைந்தனர். சோமான வழியில் செல்வமும் செல்வாக்கும் அடைங்கமையால் சாரர் என்று இவர் பேர் பெற நேர்ந்தனர். செல்வம் சோவே நேரே இவர் களவு புரியாமல் வேறு சிலரை எவிக் கள்ளம் புரிந்து கில புலங்களைப் பெருக்கி உள்ளஞ் செருக்கி வந்தார். குடிசனங்கள் இவருக்கு அஞ்சி கொந்தனர். கள்ளம் புரிந்து எவ்வழியும் அல் லல் விளைத்து வருகிற இக்கொடியாைஅடியோடு ஒழிக் காலன்றி காடு நலமுருது என்று அக் காட்டு மன்னன் கிடமாய் முடிவு செய்தான். வேண்டிய வேலைகளை விாைந்து புரிக்கான். பயிர் களுக்குக் களை எடுத்தது போல் உயிர்களுக்குத் துயர் விளைத்து வந்த இவரை அரசன் ஒருங்கே களைந்து நீக்கினன். அந்த நீக்கம் எல்லாருக்கும்.ஆக்கமாய் எங்கும் உவகைகளை விளைத்துகின்றது.

  • பாரமே உலகுக்கு இந்தப் பாதகர் இருப்ப தென்று விரமே மிகுந்த வேந்தன் விறலுடன் துணிந்து வெய்யோர் பேரவே புரிந்தான் சாரர் பெயர்ந்தடி யோடொழிந்தார் சோரர்கள் தொலைந்தார் என்றுககமுடன் வாழ்ந்தார் மாந்தர்’ களவினல் பொருளை யிட்டி வளமாய்ப் பெருகி வந்தவர் முடிவில் பழிபாவங்களை நீட்டி கி.அத்தி விட்டுக் குடியோடு அழிந்து அடியோடு ஒழிந்து போயினர். களவில்ை ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும் என்பதை உலகம் இவர்பால் கண்டு உண்மை தெளிந்து உவகை மிகுந்து கின்றது.

வஞ்சக் களவால் வளம்பெருகி வந்தாலும் நெஞ்சத் துயரம் நெடிதோங்கி--நஞ்சம் படிந்த நீர் போலப் படுகேடே மண்டி வடிந்தொழியும் யாவும் வறந்து. கொள்ளையால் வந்தபொருள் கொள்ளைநோய் போல்விரிந்து பொள்ளெனப் போகும் புறம். கள்ளப் பொருள் கொள்ளித் தீ.