பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1440 திருக்குறட் குமரேச வெண்பா மெலியோர்மேல் வரில் இகத்தில் வெம்பழியும் மேல்நாகும் விளேக்கும் அல்லால் நலிவோர்தம் உவப்பினுக்கும் நகைக்கும் எய்தும கேடுஇனிய நட்பு மாற்றும் புலியோகம் பசுவினம்போல் பல்காமை அதன்சினத்தின் பொருட்டால் அன்ருே? (மெய்ஞ்ஞான விளக்கம்) வெகுளியின் தீமையை இது கன்கு விளக்கியுள்ளது. இக்தக் குறளைக் கருத்தில் கொண்டு விருத்தியடைந்து வந்து.ா ளது. உண்மை நிலைகளை ஊன்றி உணர்ந்து கொள்க. வலியரைச் சினப்போர் வரையினின் மோது மட்கலம் எனவுடைந் தழிவார்; பொலிவுறத் தமைஒப் பவர்களைச் சினப்போர் புலியிரண்டு ஒன்றை ஒன் றடித்து மெலிவொடும் இரண்டும் கெடுதல்போல் கெடுவார்; மெலியரை வெகுளுவோர் வேங்கை எலியினை எதிர்த்த தன்மைபோல் இழிவுற்று எரிநர கிடையிழிந் தழிவார். (நீதி நூல்) செல்லா இடத்திலும், செல்லும் இடத்திலும் சினக்கால் விளையும் தீமைகளை இது வடித்துக் காட்டியுளது. எவ்வழியும் வெகுளி வெவ்விய துயாங்களையே விளைத்து விடும் ஆதலால் இதனை யாண்டும் அடக்கி ஒடுக்கி ஒழித்து விடுவதே நல்லது. பெற்றிடு திருவினில் பிறந்த வெஞ்சினம் கற்றவர் உணர்வையும் கடக்கும் அன்னது முற்றுறு கின்றதன் முன்னம் அன்பினேர் உற்றன கூறியே உணர்த்தல் வேண்டுமால். (கந்த புராணம்) கற்ருர் முன் தோன்று கழவரககம் காதலித்தொன் றுற்ருர்முன் தோன்ரு உசாவுதல்-தெற்றென அல்ல புரிந்தார்க்கு அறம்தோன்ரு எல்லாம் வெகுண்டார்முன்தோன்ரு கெடும். (நான்மணி) சினம் எவரையும் கீழாக்கி எல்லாக் தீமைகளையும் இழைத்து விடும் என இவை உணர்த்தியுள்ளன. தீய இகனை அடக்கினவரே தாயாாய் உயர்ந்து சிறந்து வருகிரு.ர்.