பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2136. திருக்குறட் குமரேச வெண்பா வேத விழுப்பொருள் ஒதினர். (பெருங்கதை 3-14) வேதத்தை இவ்வாறு விழுமிய நிலையில் கூறியுள்ளார். கேடில் விழுப்பொருள். (குறுந்தொகை 216) ஒருமைக்கண் ஒருவன் கற்ற கல்வி யாதும் கெடா மல் எழுமையும் தொடர்ந்து உயிர்க்கு இன்பம் புரிந்து வருதலால் கேடின்மை தெரிய வந்தது. சால்புடைய மேலோரிடமே எவ்வழியும் மேவி இசை பயங்துள்ளமை, யால் விழுமிய கிலேமை தலைமையா விளங்கி கின்றது. பொன் மணி முதலாக உலகத்திலுள்ள வேறு எங் தப் பொருள்களுக்கும் இந்த அரிய இயல்புகள் அமைய வில்லே அழிவின்மையும் விழுமிய தன்மையும் கல்வி ஒன் று க் கே கிழமையாய் அமைந்துள்ளன. அரிய பெரிய மகிமைகள் வாய்ந்துள்ள இந்த அதிசய செல் வத்தை மனிதன் புனிதமாத் துதி செய்து மதியுடன் விரைந்து போற்றிக் கொள்ள வேண்டும். செ ல் வம் என்னும் சொல் உலக வாழ்க்கைக்கு உரிய பொருள்களேயே பொதுவாக உணர்த்தி வரும். உண்மையான உயிர்ச் செல்:த்தின் வேறுபாடு தெரிய இரண்டு அடைமொழிகள் ஈண்டு அடுத்து வந்தன. ஈதல் துய்த்தல் முதலிய வழிகளில் செலவு செய் தற்கு உரியதாய் இனிது சேர்ந்திருப்பது எதுவோ அது செல்வம் என நேர்ந்தது. இன்னல் தரும்பொருளே ஈட்டுதலும் துன்பமே பின்னதனேப் பேணுதலும் துன்பமே - அன்னது அழித்தலும் துன்பமே அந்தோ பிறர்பால் இழத்தலும் துன்பமே யாம். - (நீதிசாரம் 46) ஈட்டலும் துன்பமற்று ஈட்டிய ஒண் பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் - காத்தல் குறைபடின் துன்பம் கெடின் துன்பம் துன்பக்கு உறைபதி மற்றைப் பொருள். (நாலடி 280) தீயாலோ நீராலோ தேர் வேந்தர் தம்மாலோ மாயாத தெவ்வர் வலியாலோ - யாதாலோ