பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

空216 திருக்குறட் குமரேச வெண்பா இந்த இலக்கண விதி இங்கே எண்ணி யுணர வுரியது. விலங்கு என்றது நேரே கல்லாமை துலங்க. கற்ருர்க்கும் கல்லார்க்கும் உள்ள வேற்றுமையை விளக்குதற்கு மக்களையும் விலங்கையும் ஒப்புக்காட்டி யது, ஏற்றத் தாழ்வுகளே எளிது தெளிய. கல்வியின் உயர்வையும் கல்லாமையின் இழிவையும் வல்லார் அல் லார் மேல் ஏற்றி வகையாச் சொல்லி யருளிர்ை. மிருகங்களே விட மனிதன் உயர்ந்தவன் என நேர்க் தது எதல்ை ? அறிவிஞலே யாம்; அந்த அறிவு கல்வியி குல் ஒளி பெற்று உயர்கிறது: கல்லாமையால் இழி வுற்று அயர்கிறது. ஆகவே கற்றவர் மேதைகளாய் உயர்ந்து விளங்குகின்ருர், கல்லாதவர் பேதைகளாய் இழிந்து எவ்வழியும் பிழையுற்று ஒழிகின்றர். மன உணர்வும் மதிநலனும் மகிமையான எண்ணங் களும் வளர்ந்து வரும் அளவே மக்கள் என்று தக்க மதிப்புடன் கிளர்ந்து தெளிக்கு உயர்ந்து வருகின்றனர். உரிய மாண்புகள் ஒருவி தளவே பெரிய தாழ்வுகள் கருவி கிற்கின்றன, பிதைகள் தொடர்ந்து வரவே பிழைகள் அடர்ந்து படர்ந்து கொன்கின்றன். விலங்குகள் உண்ணுகின்றன: உறங்குகின்றன: பெட்டைகளோடு கூடுகின்றன: குட்டிகளேப் பெறுகின் றன. உண்ணல் உறங்கல் பெறுதல் ஆகிய இந்த அளவிலேயே கின்று ஒழிபவர் மக்கள் உருவில் மருவி யிருப்பினும் அவர் மாக்களாகவே இழிந்து கழிந்து போகின்ருர். இளிவு நேராமல் தெளிவு ஏற வேண்டும். கல்லாமையால் நல்ல அறிவு இல்லாமல் போகிறது: போகவே அறிவு கெட்ட மிருகங்கள் என அந்த மனிதர் கிந்தை படிந்து எங்கும் கிலே குலேயலாயினர். கல்லாத மக்கள் பொல்லாத மாக்களே.