பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2220 திருக்குறட் குமரேச வெண்பா கல்லாதவன் காட்டு மரம் என்று ஒளவையார் இஷ் வாறு காட்டி யிருக்கிருர். கல்வியை இழந்த போது மனிதன் எவ்வளவு தாழ்வாய் இழிந்து படுகிருன் என்பதை இங்கே உணர்ந்து வருங்துகிருேம். இலங்கு நூல் கல்லான் விலங்கு என்ருர் தேவர். நீட்டோலே வாசியான் கெட்டை மரம் எ ன் ரு ர் பாட்டியார். இந்த இரண்டு மேதைகளும் கல்வியைப் போதித்திருக்கும் போதனைகள் கருதி யுணர வுரியன. மனிதன் மேலான பிற ப் பி ல் பிறந்துள்ளான்; ஆறறிவுடையய்ைச் சீரடைந்திருக்கிருன் இருந்தாலும் கல்வி யறிவை இழந்துவிடின் எல்லா மேன்மைகளேயும் இழந்தவய்ை இழிந்து தாழ்ந்து கழிந்து வீழ்ந்து ஒழிந்து போகிருன். கல்லாமை புல்லாமல் வாழ்வதே வாழ்வாம். கல்லாத புல்லறிவில் கடைப்பட்ட நாயேனே வல்லாள ய்ைவந்து வனப்பெய்தி யிருக்கும் வண்ணம் பல்லோரும் காண என்றன் பசுபாசம் அறுத்தானே எல்லோரும் இறைஞ்சு:தில்லை அம்பலத்தே கண்டேனே. (1): கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும் மற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார்கழல்வந்து உற்றிறுமாந்து இருந்தேன்எம் பெருமானே! அடியேற்குப் பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றே நின் பொன்அருளே? {2, (திருவாசகம்: கல்லா நாயேன் எனினும் எனக் காக்கும் தாய் நீ என்றுலகம் எல்லாம் அறியும் ஆதலினல் எந்தாய்! அருளா திருத்தி.எனின் பொல்லாப் பழிவந்து அடையுமுனக்கு அரசே இனியான் புகல்வதென்னே செல்லார் பொழில்சூழ் திருத்தணிகைத் தேவே! ஞான ச் செழுஞ் சுடரே! (அருட்பர்}