பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்திரண்டாவது அதிகாரம் கே. ஸ் வி. அஃதாவது அறிவுடையார் கூறும் உறுதிப் பொருள் களேக் கருதிக் கேட்டல். கண்ணுல் நேரே பார்த்துப் படிப்பது கல்வி: காதால் வேறே கேட்டுக் கொள்வது கேள்வி. இளமையில் முயன்று கற்றவர்க்கும் அவ்வாறு கல்லாதவர்க்கும் ஒருங்கே நல்ல அறிவு நலன்களே நல்கி வருதலால் கல்வி கல்லாமைகளின் பின் இது வைக்கப் பட்டது. நூலறிவும் கேள்வி ஞானமும் மேலான மேன் மைகளே மாந்தருக்கு விளேத்து அருளுதலால் அவை இனமாய் இணேந்து ஈண்டு ஒர்ந்து உணர வந்தன. 411. கொண்ட செல்வம் எல்லாம் கொடுத்துச் செவிச்செல்வம் கொண்டானேன் போசன் குமரேசா-கண்டபெருஞ் செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலே. (க) இ-ள் குமரேசா சிறந்த செல்வங்களே எல்லாம் கொடுத்து ஏன் போசன் செவிச் செல்வத்தை உவந்து கொண் டான்? எனின், செவிச் செல்வம் செல்வத்துள் செல்வம்: அச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலே என்க. இது, கேள்வியின் பெருமையை உணர்த்துகிறது. செவியால் எய்தும் திரு செல்வத்துள் சிறந்த செல்வம்; அது செல்வங்கள் எல்லாவற் றுள்ளும் மேலான விழுமிய மெய்ச் செல்வமே. ஏழு சீர்களுள் ஐந்து சீர்களில் செல்வம் சேர்ந்துளது. செல்வம் செழித்து வந்துள்ளதை உள்ளம் களித்து நோக்கி உறுதி புண்மைகளே ஒர்ந்து கேள்வியின் உயர் கிலேயை உய்த்துணர்ந்து தேர்ந்து கொள்கிருேம். செவிச் செல்வம் என்றது கேள்வியை. செவி =காது. ஒலிகளேச் செவ்வையாய்க் கேட்பது செவி என வந்தது. நாதத்தைக் கதுவி அறிவது காது.