பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. .ே க ள் வி 2.293 கேள்வி இன்பத்தை இழந்தவர் மனித வுருவில் வாழ்ந்து வந்தாலும் தன் உயிர்க்கும் பிற உயிர்கட்கும் யாதொரு பயனும் இல்லாதவராய் இருகால் விலங்கு கள் போல் இழிந்து உழலுவதால் அவர் செத்து ஒழிக் தாலும் உயிரோடு திரிந்தாலும் ஒரு கிலேயான புலேயே. என் ? என்னும் வி ைஈனமான அவரது இழி நிலையை எள்ளி இகழ்ந்து வந்தது. யாருக்கும் பயன் படாத அந்தச் சுவை கேடர் விரைந்து அழிந்து மறைந்து போவதே இந்தப் பூமிக்குப் பாரம் குறைந்த படியாம். அவியினும் என்று சாவை முன்னதாக் குறித்தது. அவர் உயிரோடு சவமாய்த் திரிவதினும் செத்து ஒழி வதே உத்தமம் என்பதை உய்த்து உணர. அவிதல் = அழிதல்: சாதல். பிறப்பில் மக்களாய்ப் பிறந்திருந்தாலும் சிறப் பான உணர்வொளியை இ ழ ங் து போனமையால் இழிந்த மிருகங்களே என்பார் மாக்கள் என்ருர். கல்லாதவர் குருடர்; கேளாதவர் செவிடர் என்னும் இந்த அளவோடு கில்லாமல் அந்தப் பொல்லாத மூடங் கள் ஈண்டு இல்லாமல் ஒழிவதே நல்ல தாம் என்று உள்ளம் கனன்று எள்ளி யிகழ்ந்திருக்கிரு.ர். கல்வியும் கேள்வியும் உணர்வுக்கு நல்ல சுவை உணவுகளாய் உறுதி நலன்களே உதவி யருளுகின்றன. இளமையில் கல்லாமல் கழிந்து போனலும் கல்லார் வாய்க் கேள்விகளேக் கேட்டுவரின் எல்லா மேன்மைகளே யும் எளிதே அவர் அடைந்து கொள்ளுகின்றனர். இறுதி யான அந்த ஆதரவையும் பேணுமல் வீணே இழந்து விடின் அறிவு பாழாய் அவலம் அடைய நேர்கின்றனர். சிறந்த மனிதப் பிறப்பை அடைந்தும் உயிர்க்கு உரிய ஒளிகளே அடையாமல் மடமையாய் இழிந்து கழிவதி: னும் விரைந்து இறந்து படுவது இதம் என வங்தது.