பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தெரிந்து செயல் வகை 2525 இதற்கு இடமும் இனமும் தெரிய வேண்டிய தேவை யில்லை என்பாரை நோக்கி இது தேவையாய் வந்துளது. பிறர்க்கு இதமாய் இன்பம் தருவதை நல்லது என் றும், இடராய்த் துன்பம் புரிவதைத் தியது என்றும் எண்ணி வருகிருேம். எவர்க்கும் இனியது ஆயினும் இனம் தெரிந்து இயல்பு அறிந்து செய்யா வழி அது தவருய் நேரும். இனிய பாயசமும் நல்ல ஆவின்பாலும் நறுநெய்யும் சிலர்க்குப்பிடியா. அவருடைய இயல்பினே அறியாமல் அவர்க்கு அவற்றை வலிந்து வார்த்தால் பண்பு அறிந்து செய்யாத புண்பாடாய் அது புரை படிந்து மிறை விளங்து விடும். பலவகை நிலையினராய் மனிதர் பரந்து விரிந்துள்ள மையால் அவர் அவர் என்று பன்மையால் குறித்தார். புறத்தே உருவங்கள் வேறுபட்டிருத்தல்போல் அகத்தே உள்ளப் பண்புகளும் மாறுபட்டிருக்கின்றன. அக் த நீர்மை நிலைமைகளைக் கூர்மையாய் ஒர்ந்தே எதையும் சிர்மையோடு செய்ய வேண்டும். இனியன உதவல், இதமொழி பகர்தல், அறிவுகலம் அருளல், முதலிய பெரிய நன்மைகளையும் தரங்தெரிந்தே தகவோடு புரிய வேண்டும்; தெரியாது புரியின் பரிதாபமே யாம். W. இயற்கைகுணம் சோதித்து முன்னே பின்னே யாவையுமாம் பிரமம்நீ என்னல் வேண்டும்; வியப்புறஆ சையிலுழல்வார்க் கிவ்வாறு ஒதின் மீளாத தீநரகில் வீழ்த்த தாகும்; தியக்குறு போகத்தாசை தீர்ந்து புந்தி தெளிந்தவுனேப் போல்வார்க்கே திகழத்தோன்றும் மயக்கமற வுணர்த்தவல்ல குருவைக் கிட்டா வருந்தியுந்தன் பிறப்பறுக்கும் மகனும் ஆங்கே. (ஞானவாசிட்டம்) இந்தப் பாசுரம் இங்கே சிந்திக்க வுரியது. பரிபக்கு வத்தையும் பண்பையும் முன்னதாக ஆராய்ந்து அறிந்த பின்பே பிரம உபதேசத்தை ஒருவனுக்குப் போதிக்க வேண்டும்; தெரியாமல் போதித்தால் அது .ெ ப. ரி ய: