பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தெரிந்து செயல் வகை 253.1 சண்டமுகில் உருமனைய சராசந்தன் தனக்கஞ்சி வண்டுவரை அரணுக வடமதுரை கைவிட்ட திண்டிறல்மா தவன்மதியோ? திகழ்தருமன் தன்மதியோ? பண்டுமவர் கருத்தறிந்து பார் போய் வேண்டுவ தென் றன். -- (பாரதம்) சாத்தகி உரைத்துள்ள இந்த வார்த்தைகளால் இவ னுடைய உள்ளத் திண்மையையும் உறுதி நிலையையும் உணர்ச்சித் திறங்களேயும் ஒர்ந்து கொள்ளுகிருேம். வலியராயுள்ளவர் மெலியவர் போல் மேவலரிடம் மேவ லாகாது என்று வலியுறுத்தியுள்ளான். பிறர் எள்ளாத வாறு எதையும் எண்ணிச் செய்ய வேண்டும் என்பதை இவன் இங்ங்னம் எடுத்துக் காட்டியிருக்கிருன். தன்னது நிலைமையைத் தனித்து நோக்கியும் இன்னது செய்வதால் விளேயும் ஈதென நன்னய வுணர்வுடன் நயந்து தேர்ந்தும்பின் மன்னவர் செயல்முறை மருவல் வேண்டுமால். உலகம் இகழாமல் ஓர்ந்து வினைசெய் கலமாம் அரசுக்கு கன்கு சீருற வினேயைத் தேர்ந்து புரிக. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. ஊதியம் பெருகிவர ஒர்ந்து வினைசெய். தெரிந்தவர்களோடு தேர்ந்து புரிக, ஆக்கம் கருதி முதலே இழக்காதே. தெளிவின்றி எதையும் தொடங்காதே. வகை தெரியாமல் மூண்டால் மாண்டாய். தக்கதைச் செய்; தகாததை ஒழிக. ஏற்ற கருமத்தை எண்ணித் துணிக. முறையே செய்யாத கருமம் புரையாம். அவரவர் இயல்பறிந்து ஆவன ஆற்றுக. யாரும் எள்ளாவகை ஆய்ந்து செய்க. 47-வது தெரிந்து செயல்வகை முற்றிற்று.

==

. s