பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்தொன்பதாவது அதிகாரம் கால ம் அ றி த ல். அ.தாவது கருமங்களேச் செய்தற்கு உரிமையான கால நிலைகளேக் கருதியுணர்ந்து உறுதிசெய்து கொள் ளுதல். வாய்ந்துள்ள வலிமைகளே ஒர்ந்து தேர்ந்து வேந்தன் வினேசெய்ய வேண்டும் என்று முன்பு கூறி ஞர்; இதில் உரிய பொழுதை நழுவ விடாமல் தொழில் புரிய வேண்டும் என்று உணர்த்துகின்ருர். உற்ற வலி யும் உரிய காலத்துடன் உறவாய்த் தோய்ந்து வரும் அளவே உரமாய் வெற்றி பெற்று விளங்கும் ஆதலால் அதன் பின் இனமாய் இ.து இனேந்து கின்றது. 481. திண்டோட் செழியனுமேன் தேர்ந்து பொழுதlந்து கொண்டுசென்ருன் போர்மேல் குமரேசா-கண்ட பகல்வெல்லும் கூகையைக் காக்கை யிகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. (க) இ-ள் குமரேசா! வலி மிகுந்த செழியனும் ஏன் பொழுது அறிந்து போர் மேல் சென்ருன்? எனின், கூகையைக் காக்கை பகல் வெல்லும், ஆகவே இகல் வெல்லும் வேந்தர்க்குப் பொழுது வேண்டும் என்க. உம்மை அம் மன்னனது வலிமிகுதியை உணர்த்தி நின்றது. தோள் வலியும் ஆள் வலியும் உடைய அவன் நாள் வலியை நாடி கின்றே வினேமேல் சென்று வென் றுள்ளான். உரிய காலமே அரிய வெற்றி என்கிறது. கூகையைக் காகம் பகலில் வென்றுவிடும்; ஆகை யால் பகையை வெல்ல வல்ல அரசர்க்கு உரிய இனிய பொழுது உரிமையாக வேண்டும். பகல்=சூரிய ஒளி வெளிவீசி நிற்கும் காலம். ஒரு நாளின் பாதியாய்ப் பகுந்து வந்துள்ளமையால் பகல் என நேர்ந்தது. எல் அல் என இரு பொழுதுகளுள்ளன. இகல்=பகை: போர். எதிரியாய் இகலி நின்று. இடர் இழைப்பவர் பகைவர் என நேர்ந்தார். அவரை