பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2700 திருக்குறட் குமரேச வெண்பா உணர்ந்த பின்பே உரிமையாய்த் தெளிந்து கொள் கிருன். அவனது தெளிவுக்கு வழிகள் பல உள்ளன: அவற்றுள் சில விழி தெரிய இங்கே வந்திருக்கின்றன. மேல், சிறுமையுடையாரைச் சேராதே என்ருர்: இதில், சீலம் உறவு திண்மை திறமை யில்லாரைத் தேருதே என்கின்ருர். சுற்றம் சூழ இருந்து குடும்பத்தை கன்கு பாது காத்து வந்துள்ள பண்புடையாளரே அரச காரியங்களே ஆராய்ந்து தி ற ைம ய ர ப் நடத்த வல்லவ ராவர்: அத்தகைய வித்தகரையே வேந்தன் தேர்ந்து தெளிந்து கொள்ளவேண்டும். பிறந்த குடும்பத்தையும் பெற்ற சுற்றத்தையும் உற்ற உரிமைகளேயும் உறுதி சூழ்ந்து அன்போடு பேணுதவன் சிறந்த அரச காரியத்துக்கு ஆகான் ஆதலால் அவனே யாதும் தேறலாகாது. சுற்றம் இலரானவர் தம்மைச் குழேல் பழிபாவமும் நாணுர்; பற்றும் இலராகுவர் விடுக; பண்பார் தகுநற் குணங்களே முற்றும் உடையார் இலர் அதல்ை முனியும் குற்றம் குணமிவற்றைத் தெற்றென் றுணர்ந்து குணமிகுந்த செம்மையுடையார் தமைத் தெளிக. (விநாயக புராணம்) இதனே ஈண்டு ஒர்ந்து உணர்ந்து கொள்ளவேண்டும். விளிந்தாரே போலப் பிறராகி நிற்கும் முளிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா; அளிந்தார்கண் ஆயினும் ஆராயா கிைத் தெளிந்தான் விளிந்து விடும். (பழமொழி 42) தன் பால் கேசம் உடையவன்போல் நேர்ந்துவரினும் தன்னேச் சேர்ந்தவரிடம் பாசமும் பண்புமின்றிப் பகை யற்றுச் சினமுற்றிருப்பின் அவனை அரசன் சேர்க்க லாகாது. தகுதி யில்லாதவனே ஆராயாமல் தெளிந்து கொண்டால் அவன் விளிந்தவய்ை அழிந்தான் என் து முன்றுறையரையர் இங்ங்னம் மொழிந்துள்ளார்.