பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. சு ற் ற ம் த ழ ல் 2769 தன் பிள்ளே யைத் தாய் பேணி வருதல்போல் தனது சுற்றத்தாரை அரசன் த ழு வி ஆதரித்து வர வேண்டும். உறவுரிமைகள் மரபு முறையாய் மருவி வந்துள்ளன. ஆதரித்து வளர்த்து வருகிற மகன் தாய்க் கும் தந்தைக்கும் ஆக்கம் பயந்து வருகிருன் தழுவி வருகிற சுற்றம் அரசனுக்கும் ஆட்சிக்கும் ஆக்கம்புரிந்து ஊக்கம் தந்து வருகிறது. நல்ல சுற்றம் வாய்த்தால் அது நல்ல பிள்க்ளப்பேறு போல் எல்லா நலங்களேயும் கல்கி எவ்வழியும் இன்பம் சுரங்து வரும். நல்ல உறவினர் யார் ? உள்ளன்புடையவர். இ ங் த உடைமையாளரை உரிமையுடன் பேணி வருவது அரசன் கடமையாம்: அதல்ை அரிய பல நன்மைகளும் பெரிய ஆக்கங்களும் உளவாம். அன்பு கனிந்த சு ற் ற ம் அமைந்தவன் ஆக்கம் நிறைந்து எங்கும் இன்பமுடன் விளங்குவான். இவ்வுண்மை இராசவர்மன்பால் அறிய வங்தது. ச ரி தம். இவன் சூரிய குலத்து அரசன். தமன் என்னும் மன்னன் புதல்வன். அறிவு அழகு ஆற்றல் வீரம் கொடை முதலிய கிலே க ளி ல் இவன் தலைசிறந்து ன்ருன். மானினி என்னும் பேரழகியை மணந்து பெரும் போகங்களே நுகர்ந்து நெறிமுறையே இவன் அரசு புரிந்து வந்தான். இவன் ஆட்சி யாண்டும் மாட்சியாய் கடந்து வந்தது. குடிகள் எவ்வழியும் மகிழ்ச்சியாய் வாழ்ந்து வந்தனர். இவனுடைய தாய்வழியிலும் தங்தை வழியிலும் உறவினர்கள் பலர் உயர் கிலேகளில் ஒளி மிகுந்து ஓங்கி யிருந்தனர். அவரனே வரும் இவன் பால் பேரன்பும் பெரு மதிப்பும் பூண்டு நின்றனர். இவ னுடைய குணநலன்களும் கொடைத் திறங்களும் எல்லா ருடைய உள்ளங்களேயும் கவர்ந்து வந்தமையால் யாவ ரும் இவனே ஆவலுடன் தெய்வம் எனப் போற்றி வந்த னர். பகை வகை யாதுமின்றி இவனது நாடு பலவகை யிலும் வளஞ்காந்து எங்கும் செழித்து விளங்கியது. 3:47