பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2786 திருக்குறட் குமரேச வெண்பா ஈசன் தன்னே ஏத்தின என்று காசும் பொன்னும் கலந்து துாவியும், வழிபடும் ஒருவன் மஞ்சனத் தியற்றிய செழுவிதை எள்ளைத் தின்னக் கண்டு 10 பிடித்தலும் அவனிப் பிறப்புக் கென்ன இடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும், மருத வட்டத்து ஒருதனிக் கிடந்த தலையைக் கண்டு தலையுற வணங்கி உம்மைப் போல எம்இத் தலேயும் 15 கிடக்க வேண்டுமென் றடுத்தடுத் திரந்தும் கோயில் முற்றத்து மீமிசைக் கிடப்ப -- வாய்த்த தென்று நாய்க்கட்டம் எடுத்தும், காம்பவிழ்ந் துதிர்ந்த கனியுருக் கண்டு வேம்புகட் கெல்லாம் விதானம் அமைத்தும், 20 விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த பெரிய அன்பின் வரகுண தேவர். - (திருவிடைமருதுரர் மும்மணி 28) பெரும் பொருளும் பெருங்கொடையும் உடைய இவ்வேங்தன் பரம்பொருள்பால் பத்திப் பிரமையோடு புரிந்துள்ள வித்தகச் செயல்களே இதில் வியந்து காண் கின்ருேம். துறவிகளும் முனிவர்களும் துதித்துப் போற். றும் குணநீர்மைகள் இம்மதிமானிடம் அதிசயமாய் மருவி யிருக்கின்றன. இந்தப் பாடலில் பதிந்துள்ள பொருள் நயங்களேயும் நிகழ்ச்சிகளேயும் கூர்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். இக் குலமகனுடைய குணநலன்கள் எவரையும் வசமாக்கி நின்றன. மரபு முறையில் மருவிய கிளேஞர்களோடு உலக மாந்தரும் இவ்வேந்தனுக்கு உறவினங்களாய்ச் சூழ்ந்து கின்றனர். பெருங்கொடையோடு பெருங்குணங்களும் உடையவன் மருங்கே சூழ்ந்து பெருங்கிளேகள் பெருகி கிற்கும் என்ப தை உலகம் காண இவன் நேரே உணர்த்தி கின்றன். அறநீர்மை ஈகை அமையின் அவன்பால் உறவாகி கிற்கும் உலகு. -