பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. பெரியாரைத் துணைக் கோடல் 240 ! ஆன்ற அறிவு நலமுடைய சான்ருேர் உறவுறின் அரிய பல நன்மைகள் எவ்வழியும் வளமாய் உளவாம். இவ்வுண்மை அத்திபதி.பால் அறிய வந்தது ச ரி த ம் . இவன் காந்தார நாட்டிலுள்ள பூருவ தேசத்து வேத தன். இடவயம் என்னும் நகரிலிருந்து இவன் அரசு புரிந்து வந்தான். இவனுடைய மனைவி பெயர் நீலபதி பேரழகுடைய அவளோடமர்ந்து இனிய போகங்களே நுகர்ந்து அரிய காரியங்களே ஆராய்ந்து ஆ ட் சி ைய இவன் மாட்சியோடு புரிந்தான். சிறந்த நீதிமானை இவன் உயர்ந்த மதிமான்களேயே த ன க் கு உறுதித் துணையாகக் கருதி எவ்வழியும் உரிமையுடன் பேணி வங் தான். பிரமதருமர் என்னும் பெரியவர்.பால் இ வ. ன் பேரன்பு பூண்டு ஒழுகினன். முன்பு இவனுக்கு உறவின ராயிருந்த அவர் பின்பு யாவும் துறந்துபோய் அருங் தவம் புரிந்து சிறந்த முனிவராய் உயர்ந்து விளங்கி ர்ை. எல்லாம் துறந்த அவரது உள்ளம் உவந்து வர உரிமை கூர்ந்து வந்தமையால் இம் மன்னன் பால் அம் மாதவர் ஆதரவு புரிந்து வந்தார். வருங்கால் ஒருநாள் தமது யோக சித்தியால் உணர்ந்ததை இவனுக்கு அவர் உணர்த்தி யருளிர்ை: “அரசே! இற்றைக்கு ஏழாம் காளில் இங்கே ஒரு பூகம்பம் உண்டாம்; இந்நகரும் நாடும் பாதலத்தில் பதிந்து பாழாம்; முன்னதாக நின் குடியோடு வேறிடம் செல்க' என்று கூறினர். அப் பெரியவர் கூறியபடியே உரியவர்களோடு இவன் அய லிடம் போய் அமைவுடன் இருந்தான். அவர் உரைத்த படியே குறித்த நாளில் அந்த அழிவு நேர்ந்தது. முன்பு இடம் பெயர்ந்து உய்ந்துபோன யாவரும் அவரைத் தொழுது துதித்து வியந்து புகழ்ந்து போற்றினர். ஆயிரத்தெண்ணுறு ஆண்டுகளுக்கு முன்னர் இது கிகழ்ந்துளது. அயலே வருவது ஈண்டு அறிய வுரியது. காந்தாரம் என்னும் கழிபெரு நாட்டுப் பூருவ தேயம் பொறைகெட வாழும் 301