பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2496 திருக்குறட் குமரேச வெண்பா பையவே கற்றுக் கற்ற பண்பின ரோடு நாளும் உய்யவே அளவளாவி உரைத்தவா நிற்றல் வேண்டும். (விநாயக புராணம்) ஐயம் திரிபு அற யாவும் கற்று நல்ல பண்பாளர் களோடு நாளும் அளவளாவி நலம் பல புரிந்து நெறியே ஒழுகி வரவேண்டும் என அரச த ரு ம த் ைத இது வரிசையுடன் அறிவுறுத்தி யுள்ளது. தெரிந்த அறிஞர்களோடு உசாவி அறிந்துகொண்ட தைத் தானும் தனியே இருந்து சிந்தித்துத் தெளிந்து கொள்ள வேண்டும் என்பார் எண்ணி என்ருர். இவ்வாறு கருமச் சூழ்ச்சிகளேத் தெளிவாகக் கருதிக் கொள்பவர்களுக்குக் கருதியன யாவும் எளிதே கை கூடும் ஆதலால் அரும் பொருள் யாது ஒன்றும் இல் என்ருர். ஆய்ந்து வினேசெயின் பலன் பாய்ந்து வரும். உரிய பெரியவர்களோடு ஒர்ந்து வினே செய்பவர் அரிய பொருள்களேயும் எளிதே பெறுவர். இது தசரத னிடமும், குவலயாகவன் பாலும் அறிய வந்தது. ச ரி த ம் . அரச திருவுடன் பெரிய செல்வங்கள் யாவும் பெற்றி ருந்தும் பிள்ளேப்பேறு இன்றித் தசரதன் பெரிதும் மறுகி நின்ருன். தனது உள்ளக் குறையை வசிட்ட முனிவரிடம் உரைத்து உசாவின்ை. மன்னனுடைய மறுக்கத்தை அந்த மாதவர் கருதி ஒர்ந்தார்; உண்மை யை உணர்ந்தார். உறுதி கூறினர்: கலேக்கோட்டு முனி வரை அழைத்து வந்து புத்திரகாமேட்டி யாகம் செய் தால் தெய்வீகமான புத்திரர்களைப் பெறலாம் என்ருர். அவ்வாறே முயன்று அம்முனிவரைக் கொண்டு வந்து அவ் வேள்வியை இவன் செய்துமுடித்தான். முதல்வன் ஆன திருமாலே இம் மன்னனுக்குப் புதல்வராய்த் தோன்றினர். அந்த அரிய பேற்றைக் கண்டு இவன் பெரிய மகிழ்ச்சி அடைந்தான். இவன் பெற்றுள்ள மகப் பேற்றின் மகிமைகளே மாதவர்களும் வியந்து புகழ்ந் துள்ளனர். அயலே வருவன ஈண்டு அறிய வுரியன.