பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29.48 திருக்குறட் குமரேச வெண்பா மழக ளிற்று மருவலர் போர்கடந்து அழலும் வேற்படை அங்கன் அறநெறி ஒழுகு சேயை உயிர்த்திலம் என்றிரும் பொழில் இரங்கப் புகுந்தனன் கானகம். (3) வரிச்சு ரும்பு வழிமது மாந்தவாய் விரிக்கும் பூந்தொடை வேந்தர் திறையிடக் குரைக்கும் வேலே மண் கொண்டு கொழுநிதிச் செருக்கு மிக்கன ன் செஞ் சில வேன னே. (4) (பாகவதம், 4 : 4) இவனுடைய செருக்கு சிறுமை மடமை கொடுமை முதலிய கிலேகளே இவற்ருல் அறிந்து கொள்கிருேம். பெற்ற தந்தையும் உள்ளம் வெறுத்து உருத்து விலகும் படி குற்றங்கள் மண்டி வந்த இவனே எல்லாரும் எள்வி இகழ்ந்தார். இவன் ஆளுவதைவிட மாளுவதே நல்லது என்று கல்லோர் வருந்தி வந்தமையால் விரைந்து இவன் இறந்து ஒழித்தான். இரக்கம் இல்லாத அரசன் ஆட்சியி லுள்ள குடிகள் மழையில்லாத பயிர்கள் போல் து பச் களால் வாடி நிற்பர் என்பது இவனிடம் கூடி கின்றது. வானம் பொழியாத வையமென மன்னுயிர்கள் கோனின்றேல் குன்றும் குலைந்து. அளி அரசுக்கு ஒளி. உடைமை உடையும். 558. உள்ளவரே துன்புற் றுளேந்தார் நரகன்கோல் கொள்ள நின்ற போதேன் குமரேசா-எள்ளலுறும் இன்மையின் இன்ன துடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின். (அ) இ-ள். குமரேசா! நரகாசுரன் ஆட்சியில் செல்வர்கள் ஏன் அல்லல் உழந்து அலமந்து நொந்தார்? எனின், முறை செய்யா மன்னவன் கோல் கீழ்ப்படின் உடைமை இன்மையின் இன்னது என்க.