பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28.18 திருக்குறட் குமரேச வெண்பா அங்கே துருவாச முனிவர் வந்தார். இறைவனேப் பூசித் துக் கையில் கொண்டு வந்திருந்த அழகிய செந்தாமரை மலரைமரியாதையுடன் வாழ்த்தி இவனிடம்கொடுத்தார். தனது பெருமித நிலையில் அவரைச் சிறிதும் மதியாமல் அம்மலரை வாங்கி யாசீனமேல் வைத்தான். அது துதிக் கையால் இழுத்து அதைக் கீழே வீழ்த்தி மிதித்தது. அதைக் கண்ட முனிவர் கடுங்கோபம் கொண்டார்: “ ஏ இந்திரா! உன் செல்வச் செருக்கால் உள்ளம் குருடுபட்டு ஒன்றும் தெரியாமல் உணர்விழந் துள்ளாப் ! ஈசன் அருளே நாடும் மேலோர்கள் நீசம் என்று எள்ளித் தள் எளிய இழிந்த பொருள்களேயே நீ மருளாகக் கொண் டிருக்கிருய ! உன் மகிழ்ச்சிக்களிப்பு இகழ்ச்சி யிளிப் பாய் இடரையே தந்தது: யானேயும் படருழங்து படு துயரடைந்தது ' என அம் முனிவர் முனிக் து சபித்தார். அவர் எள்ளி இகழ்ந்தது, உள்ளக் கொதிப் பால் துள்ளி வந்தது. உணர்வு கலன்களும் அதனுள் ஒங்கி வந்தன. புள்ளியதோல் ஆடை புனேந்தரவப் பூணணிந்த வெள்ளிய செங்கண் விடையான் அடிக்கமலம் உள்ளிய மெய் அன் புடையார் அருவருத்துத் தள்ளிய செல்வத் தருக்கிய்ை ! என் செய்தாய்? (1) கதித்தார் முடியரசர் கையுறையே நன்கு மதித்தாய்; எம்ஈசன் மதிமுடிமேல் சாத்தும் பொதித்தா தவிழ்மலரைப் போற்ருது வாங்கி மிதித்தானே சிந்த அதன் மேல் வைத்தாய் பேதாய் ! (2) வண்டுளரும் தண்டுழாய் மாயோன் இறுமாப்பும் புண்டரிகப் போதுறையும் புத்தேள் இறுமாப்பும் அண்டர் தொழி வாழுன் இறுமாப்பும் ஆலாலம் உண்டவனேப் பூசித்த பேறென் றுணர்ந்திலே யால். (3) சேட்டான வான வ! நின் சென்னி செழியரில் ஒர் வாட்டான வீரன் வளையால் சிதறுக ;நின் கோட்டான நாற்கோட்ட வெண்ணிறத்த குஞ்சரமும் காட்ட னே யாக என இட்டான் கடுஞ்சாபம். (4) (திருவிளையாடல் 2-12-15}