பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3114 திருக்குறட் குமரேச வெண்பா அரிய காரியங்களே ஆற்றி வந்தவர்க்கு உரிய பொருள், அணி, விருது முதலிய சன்மானங்களே யாரும் உவந்து செய்வர். ஊர் அறிய நாடு அறியச் செய்கின்ற இத்தகைய சிறப்புகளே ஒற்றர் இடத்து மறைவாகவே செய்ய வேண்டும். பிறர் அறியும்படி செய்ய கேரின் அவர் ஒற்றர் என்றும், அரசனுக்கு உரிமையாக உற்ற: வர் என்றும் யாவரும் தெரிய நேர்வர். அவ்வாறு தெரி யின் மருமமாக உளவறிந்து வருகிற அவ் ஒற்றின் கருமம் உறுதி குலேந்து படும். மறை = இரகசியம்: மருமம். மறைக்கப் படுவது, மறைவாக வைத்திருக்க வுசி யது மறை என வந்தது. மங்திரம் முதலியன இங்த வகை யில் அமைந்தன. சில மருமங்கள் அரச தருமங்கள் ஆகின்றன. அவை இங்கே கருத வந்தன. மறைவாகவே சென்று மருவலருடைய மறைகளேத் தெளிவாக அறிந்து வந்து உறவுடன் கூறும்ஒற்றனுக்கு மருமமாகவே மன்னன் சன்மானம் முதலிய மரியாதை களே உரிமையோடு தனியே புரிய வேண்டும். அறியச் செய்யற்க என்றது, பிறர் அறியாத படி தரமாகச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நின்றது. ஒற்றருக்கு உதவுதலே மற்றவர் அறியலாகாது. மாற்றவன் ஒற்றர் ஒற்ரு வகையினில் மறைய நம்பிக்கு ஆற்றின தோழர்க்கு எல்லாம் அணிகலம் அடிசில் ஆடை வேற்றுமை யின்றி வேண்டுட் ட மைத்தன னருளி இப்பால் ஏற்றுரி முரசம் நாண எறி திரை முழக்கின் சொன்னன். (சீவகசிந்தாமணி- 21 42; சீவகனுக்கு உதவிபுரிந்த உரிமையாளர்க்கு அணி கலம் ஆடை முதலிய சிறப்புக்களே எதிரிவகையினர் எவரும் அறியாத படி கோவிந்தன் என்னும் மன்னன் மருமமாச்செய்துள்ளான். அந்த உண்மையை இச்செய்யுஇ ளால் அறிந்து கொள்கிருேம். மாற்றவன் ஒற்றர் ஒற்ரு