பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

பாயிர இயல்1


அறத்துப்பால் பாயிர இயல் 1 2, 1. கடவுள் வாழ்த்து (இறைவன் இலக்கணம் விளக்கப்படுகிறது) அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. i உலகில் வழங்கிவரும் எழுத்துக்கள் எல்லாம் ஒலிவடிவான 'அகரமாகிய முதலை உடையன; அதுபோல, உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடையது. - கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். 2 எல்லா நூல்களையும் கற்றவனுக்கு அக்கல்வி அறிவால் உண்டான பயன் என்னவென்றால், தூய அறிவினன் - மெய்யுணர்வினன் - ஆகிய இறைவனுடைய நல்ல அடிகளைத் தொழுதல் ஆகும். மலர்மிசை எகினான் மாண்டி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். 3 உள்ளக் கமலத்தில் மனத்தில் சென்றிருப்பவனான இறைவனுடைய மாட்சிமைப்பட்ட அடிகளை எப்போதும் நினைப்பவர்கள், உலகில் அழிவின்றி வாழ்வார்கள். வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. 4 விருப்பும் வெறுப்பும் இல்லாவனான இறைவனின் அடிகளை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, எக்காலத்திலும் துன்டமே உண்டாகாது. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு. 5 அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும். இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை. -