பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை H94

6. புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை. 966 மானத்தை விட்டுத் தன்னை அவமதிப்பார் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலை இவ்வுலகில் புகழினையும் கொடுக்காது. புத்தேள் உலகத்தும் செலுத்தாது. இனி அவன் அப்படி நடப்பது ஏன்?

7. ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று. 967 தன்னை இகழ்வார் பின்னே சென்று ஒருவன் வாழ்வதைவிட அப்படிச் செய்யாமல் இறந்தான் என்று சொல்லப்படுதல் அவனுக்கு நன்று. மருந்தோம்ற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை 988 பீடுஅழிய வந்த இடத்து. உயர்குடிப்பிறப்புத் தன்மையாகிய மானம் அழிய வந்தபோது இறவாமல் இவ்வுடம்பினைக் காக்கும் வாழ்க்கை பின்னும் இறவாமைக்கு மருந்தாகுமோ? . மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். 969 தன்னுடைய மயிர்த்திரளில் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்கள் தங்கள் (உயிர் நீங்குவதற்கான) மானம் கெடவரின் தாங்காது இறப்பர். இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு. 970 தமது மானத்திற்கு இழிவு வந்துற்றபோது உயிர் வாழாமல் அதனை நீத்த, மானமுடையாரது புகழ் வடிவினை எப்போதும் உலகத்தார் தொழுது துதிப்பர்.